[X] Close

தினமும்  லெமன் ஜூஸ் குடிங்க... வெயிலின் பாச்சா பலிக்காது!


lemon-juice

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Mar, 2018 10:00 am
  • அ+ அ-

                 

 குளிர்ச்சி தரும் கனி. ஏழைகளுக்கு ஏற்ற கனி... எலுமிச்சை ஜூஸ். என்று கொண்டாடுகிறார்கள் மக்கள்.

‘அப்பாடா...’, ‘உஷ்...’ என்கிற வார்த்தைகள் இனி ஒருநாளைக்கு பத்துமுப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம். திருவாளர் வெயில், தன் உக்கிர முகத்தைக் காட்டி, உஷ்ணத்தாலேயே வைத்து நம்மை செய்யப் போகிறார்.

‘எவ்ளோ தண்ணி குடிச்சாலும் தாகமே அடங்கமாட்டேங்கிது’ என்று சொல்லாதவர்கள், எவரும் இருக்கப் போவதில்லை. இவர்களுக்கெல்லாம்... இவர்களுகென்ன இவர்களுக்கு... நமக்கெல்லாம்  ஆபத்பாந்தவனாக இருக்கப் போவது எலுமிச்சை பழம்தான்.   

 எலுமிச்சை, கிருமி நாசினியும் கூட. வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து, உடலை சுத்தம் செய்யக்கூடியது லெமன் ஜூஸ்.

  மலேரியா, காலரா, டைபாய்டு போன்ற நோய்களை அழிப்பதிலும் வராமல் தடுப்பதிலும்  எலுமிச்சைக்கு இணையே இல்லை. எலுமிச்சை பழத்திற்கு இன்னொரு சிறப்பு உண்டு. அந்த சீசன் இந்த சீசன் என்று எல்லா சீசன்களுக்கும் அப்பாற்பட்டு, வருடம் 365 நாளும் கிடைக்கும் எலுமிச்சையின் சேவை... நமக்கு எப்போதுமே தேவை.

எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் இந்த எலுமிச்சையை, எல்லாக் காலங்களிலும் ஜூஸாகக் குடிக்கலாம். பித்தம் குறைத்து எனர்ஜியைத் தரும் ஜூஸ்... எலுமிச்சை ஜூஸ். எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து குடிக்கலாம். அல்லது சர்க்கரை கலந்து குடித்தால், இன்னும் எனர்ஜியைக் கூட்டித் தரும். சிலர் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சர்க்கரை என்று சரிவிகிதத்தில் சேர்த்துக் கலக்கிக் குடிப்பார்கள்.

வீட்டில் இருந்து கிளம்பும் போதே, ஒரு பாட்டிலில் எலுமிச்சை ஜூஸ் எடுத்துச் செல்லுங்கள். நா வறண்டிருக்கும் போதெல்லாம், கொஞ்சம் தண்ணீர் போல் எடுத்து குடித்துக் கொள்ளுங்கள். தாகசாந்திக்கு தாகசாந்தி, எனர்ஜிக்கு எனர்ஜி என்று டூ இன் ஒன்னாகி, இரட்டிப்புப் பலன்களை வழங்கும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.     

முன்பெல்லாம் கடையில் டீ கேட்டால், லைட்டா ஸ்ட்ராங்கா... என்று கேட்பார்கள். ஆனால் இப்போது லைட்டா ஸ்ட்ராங்கா, பிளாக் டீயா லெமன் டீயா, கிரீன் டீயா என்று கேட்கிறார்கள். இதில் பலரும் லெமன் டீ குடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதுவும் நன்மைக்கே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிகப்படியான எடை என அலுத்து சலித்துக் கொள்பவர்கள்... தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் போதும்! அல்லது லெமன் டீ குடித்து வந்தால் போதும்... எடை குறையும். தேவையற்ற கொழுப்பு கரையும். எடை குறைந்து சிக்கென இருக்கலாம்.

  வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற ஜூஸ்... எலுமிச்சை ஜூஸ்!

 உயர் ரத்த அழுத்தம் உள்ள அன்பர்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் இருந்து மீளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக,  உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் வீரியமும் சக்தியும் வல்லமையும் தயாள குணமும் எலுமிச்சைக்கு உண்டு.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close