[X] Close

வேகமாக வளர்ச்சி அடையும் முதல் 3 தமிழக நகரங்கள் எவை? - சர்வதேச ஆய்வில் பரபரப்பு தகவல்


world-s-fastest-growing-cities

  • நெல்லை ஜெனா
  • Posted: 06 Dec, 2018 13:28 pm
  • அ+ அ-

புதுடெல்லி

பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு முதல் 2035 ஆண்டுக்குள் அதிகமான பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு நகரங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ளது.

தொழில் வளர்ச்சி மட்டுமின்றி நகரங்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் பட்டியல் தயார் செய்துள்ளது. இந்த பட்டியலில் வழக்கம்போல் அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளின் பட்டியலில் மேலை நாடுகளே கோலோச்சுகின்றன.

நியூயார்க் முதலிடத்திலும், டோக்கியோ இரண்டாவது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 3வது இடத்திலும், லண்டன் 4வது இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நகரங்கள் ஏற்கெனவே அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில் மட்டுமே முதலிடத்தில் இருக்கும் எனவும் புதிய வளர்ச்சி எதுவும் இந்த நகரங்களுக்கு இருக்காது எனவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

5வது இடத்தில் உள்ள ஷாங்காய், 6வது இடத்தில் உள்ள பெய்ஜிங் நகரங்களன் வளர்ச்சி ஒரளவு மட்டுமே இருக்கும் எனவும் கூறியுள்ளது. அதேசமயம் 7வது இடத்தில் உள்ள பாரிஸ் மற்றும் 8வது இடத்தில் உள்ள சிகாகோ நகரங்களின் வளர்ச்சி விகிதம் சரிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 2035-ம் ஆண்டுகளுக்குள் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும், வேகமாக வளர்ச்சி அடையும்  நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

 

இந்த பட்டியலில் வைரம் மற்றும் ஜவுளி தொழிலில் முன்னணி நகரமான சூரத் ஆண்டுக்கு 9.17 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.

2வது இடத்தில் ஆண்டுக்கு 8.58 சதவீத வளர்ச்சியுடன் ஆக்ரா உள்ளது.

3வது இடத்தில் 8.5 சதவீத பொருளாதார வளர்சியுடன் பெங்களூரு உள்ளது.

4வது இடத்தில் 8.47 சதவீத வளர்ச்சியுடன் ஹைதராபாத் உள்ளது.

5வது இடத்தில் 8.41 சதவீத வளர்ச்சியுடன் நாக்பூர் உள்ளது

6வது இடத்தில் 8.36 சதவீத வளர்ச்சியுடன் தமிழகத்தின் திருப்பூர் நகரம் உள்ளது.

7வது இடத்தில் 8.33 சதவீத வளர்ச்சியுடன் ராஜ்கோட் உள்ளது

8வது இடத்தில் 8.29 சதவீத வளர்ச்சியுடன் தமிழகத்தின் திருச்சி உள்ளது.

9வது இடத்தில் 8.17 சதவீத வளர்ச்சியுடன் தமிழகத்தின் சென்னை உள்ளது.

10வது இடத்தில் 8.16 சதவீத வளர்ச்சியுடன் விஜயவாடா உள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close