[X] Close

மாறுகிறது திருப்பதி லட்டு: வருகிறது அட்டைப் பெட்டி


tirupati-laddus-in-paper-boxes

  • நெல்லை ஜெனா
  • Posted: 30 Nov, 2018 13:01 pm
  • அ+ அ-

திருப்பதி

திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களை அட்டைப்பெட்டியில் வைத்து வழங்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்திருப்பது போலவே திருப்பதியிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி நகரில் கடைகள், வீடுகள், பொது இடங்களில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஆனால் திருமலை திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் பிளாஸ்டிக் பைகளில் வைத்தே வழங்கப்படுகிறது. இதனால் அந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று குறித்து திருப்பதி கோயில் நிர்வாகம் சமீபகாலமாக ஆலோசனை நடத்தி வந்தது. புதுப்பிக்கத்தக்க, இயற்கை நூலிலைகளால் ஆன பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் லட்டு பிரசாதம் நெய்யில் செய்யப்படுவதால் அந்த பைகளை நெய்யை ஈர்த்து வீணாகும் சூழல் உருவாகும்.

இதையடுத்து அட்டை பெட்டிகளில் பிரசாத வழங்குவது ஆலோசிக்கப்பட்டது. இதிலும் நெய்யை உறிஞ்சக்கூடிய சூழல் இருப்பதால் சிக்கல் ஏற்பட்டது. எனினும் நெய்யை உறிஞ்சாத அளவில் தரமான அட்டை பெட்டிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று விதமான அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் லட்டுக்களை வைத்து நெய் உறிஞ்சுகிறதா? என பரிசோதனையும் செய்து பார்க்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் ‘தி இந்து’ ஆங்கிலத்திடம் கூறுகையில் ‘‘முதலில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் இந்த பெட்டிகளில் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து திருச்சானூர் உட்பட பிற கோயில்களிலும் பிரசாதங்கள் இந்த பெட்டிகளில் வழங்கப்படும். பக்தர்களின் கருத்துக்கு ஏற்ப தேவைப்படின் இந்த பெட்டிகளில் மாற்றங்கள் செய்யப்படும்’’ எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close