[X] Close

மதுரையில் பெண்களிடம் தொடர் கதையாகிறது வழிப்பறி சம்பவங்கள்: நகை பறிக்க மதிய நேரத்தை தேர்ந்தெடுக்கும் திருடர்கள்


madurai-robbery

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 10:59 am
  • அ+ அ-

மதுரை நகரின் பிரதானச் சாலை களில் உணவு இடைவேளை நேரத்தில் பெண்களிடம் நகை களை பறித்து திருடர்கள் தப்பிச் செல்லும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.

மதுரை நகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, தீவிர ரோந்து, வார்டுதோறும் எஸ்ஐகள் நியமனம், நண்பர்கள் குழுக்கள் மூலம் கண்காணித்தல், சிறப்பு ரோந்துக் குழு (டெல்டா டீம்), அதிவிரைவுப்படை என பல்வேறு நடவடிக்கைகளை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்கொண்டுள் ளார்.

மேலும், வார்டுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வார்டு எஸ்ஐகள் தலைமையில் 3 போலீஸார் அந்தந்த வார்டுகளை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். தெருப் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவம் நடந் தால் உடனே தகவல் தெரிவிக்க பொதுமக்கள், போலீஸ் நண் பர்களின் தொடர்புகளை ஏற்படுத் துகின்றனர்.

இது போன்ற சூழலில் மதுரை நகரில் தெருக்கள்தோறும் போலீஸ் நட மாட்டம் அதிகரிப்பால் வழிப்பறி திருடர்கள் மெயின் ரோடுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

அதுவும் மதிய வேளையில் போலீஸாரின் உணவு இடை வேளை நேரத்தில், வாகனங்களில் செல்லும் பெண்களை திருடர்கள் குறி வைக்கின்றனர். கழுத்தில் அதிகளவில் செயின் அணிந்து செல்லும் பெண்களை கண் காணித்து, பைக்கில் இருவர் அல்லது 3 பேர் என பின் தொடர்கின்றனர். பைக்கை ஓட்டும் நபர் ஹெல்மெட் மட்டும் அணிந்தும், பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் தங்கள் முகத்தை கைக் குட்டையால் மறைத்துக் கொண்டும் தொடர்கின்றனர்.

சமயம் பார்த்து, பைக்குடன் உரசுவது போன்று சென்று நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் குறுகிய சந்து, தெருக் களுக்குள் புகுந்து தப்பிவிடுகின்றனர். மதுரை நகரில் சமீபத்தில் இது போன்ற சம்பவங்களே அதிகளவில் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் புகார் கூறுகின்றனர். இதனால் மதிய வேளையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

குற்றச் சம்பவங்களைத் தடுக்க, தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு நடவடிக்கையால் வழிப்பறி, திருட்டு, விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன. மெயின் ரோடுகளில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க டெல்டா படையினர் தொடர்ந்து ரோந்து சுற்றுகின்றனர்.

தினமும் 50-க்கும் மேற்பட்ட வீதிமீறல் மற்றும் குற்றச் செயலில் ஈடுபடுவோரைப் பிடித்து போலீஸார் காவல் நிலையங்களில் ஒப்படைக் கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் காலை, பகல், மாலை நேரங்களில் முக்கிய சந்திப்பு, நெருக்கடி மிகுந்த சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நகைகள் அணிந்து வருவோர் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை பின்னால் யாரேனும் பின் தொடர்கிறார்களா என, வாகனத்தின் பக்கவாட்டுக் கண்ணாடி மூலம் பார்க்கலாம். அப்படி யாரேனும் தொடர்வதாக இருந்தால் சுதாரித்துக்கொள்ள வேண்டும். சந்தேக நபராக இருந் தால் அருகிலுள்ள போலீஸாரிடம் தகவல் தரலாம்.

பொது இடங்களில் போலீஸா ருக்கு மக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும். மெயின் ரோடு, தெரு பகுதி என்றாலும் போலீ ஸார் ஒரே மாதிரியாகவே கண்காணிக்கின்றனர். பதிவாகும் குற்றச் சம்பவம் தொடர்பாக குற்ற வாளிகளைப் பிடித்து, நகை, பொருட்கள் மீட்கப்படுகின்றன என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close