[X] Close

கஜா புயல் பாதிப்பால்  சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கொடைக்கானல்: சிறு வியாபாரிகள், கார் ஓட்டுநர்களுக்கு கடும்பாதிப்பு 


kodaikanal-in-trouble-bcos-of-gaya-cyclone

சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் கொடைக்கானல் தூண்பாறை அருகே அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 11:46 am
  • அ+ அ-

கஜா புயல் பாதிப்புகளால் கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகள் வருகை இன்றி கொடைக்கானல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் சிறு வியாபாரிகள், கார் ஓட்டுநர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜா புயல் கொடைக் கானல் மலைப்பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாதிப்புகளைச் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் காரில் சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்துவிட்டது.

சுற்றுலாத் தலங்களான 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள மோயர்பாய்ண்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டி க் கப்பட்டது. இந்நிலையில் பிரதான சாலையான கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலையில் விழு ந்த மரங்கள் முதற்கட்டமாக அகற்றப்பட்டன. பின்னர் மலை கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்து சீரமை க்கப்பட்டது. வாகனங்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பில்லை என்ற நிலையில் சுற்றுலாத் தலங்கள் உள்ள சுற்றுச்சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி இனிமேல்தான் தொடங்கப்பட உள்ளது.

கொடைக்கானலுக்கு ஆறு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் முற்றிலும் வராதநிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம்தான் அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன. இருப் பினும் சுற்றுலாப் பயணிகள் வருகை மிகக்குறைவாகவே உள் ளது.

இதனால் கார் ஓட்டுநர்கள், வியாபாரிகள், சைக்கிள் வாடகை கடைக்காரர்கள், குதிரை சவாரியை நம்பி தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தொழில்களும் முற்றிலும் முடங்கி உள்ளன.

ஹோட்டல் விடுதிகளில் அறை கள் பெரும்பாலும் காலியா கவே உள்ளன. இதனால் சிறு வியாபா ரிகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலை உள்ளிட்டவை முற்றிலும் சீரமைக்கப்பட்ட பிறகு சில வாரங்களில் மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என சிறு வியாபாரிகள் எதிர் பார்த்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close