[X] Close

பெண்களிடம் ரகளை செய்யும் ‘பைக்ரேஸ்’ இளைஞர்கள்: நடவடிக்கை எடுக்க மதுரை நகர் காவல் ஆணையர் உத்தரவு 


bike-race-at-madurai

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 11:42 am
  • அ+ அ-

என்.சன்னாசி

மதுரையில் அதிக வேகமாக பைக் ஓட்டும் கல்லூரி மாணவர்கள், இளை ஞர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீ ஸாருக்கு காவல் ஆணையர் டேவி ட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட் டுள் ளார்.

மதுரையில் இரு சக்கர வாக னங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக குதிரை சக்தி கொண்ட பைக்குகளை விரும்பி வாங்குகின்றனர். இது போன்ற பைக்குகளில் அதிக ஒலி எழுப்பியவாறு அண்ணா நகர், கேகே நகர், ரேஸ்கோர்ஸ், நத்தம் சாலை, காமராஜர் சாலை, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் நண்பர்களுடன் அதிக வேகத்தில் பறக்கின்றனர். இதனால் அந்த சாலைகளில் பிற வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறு, சிறு விபத்துகளும் தவிர்க்க முடியாததாக உள்ளது. மேலும், கல்லூரி வளாகப் பகுதி, மகளிர் கல்லூரி அருகில் உள்ள சாலைகளிலும் இளைஞர்கள், மாண வர்கள் தங்களது பைக் சாகசங் களை நிகழ்த்தி, ஹீரோக்களாக மாறுகின்றனர். நடந்து செல்லும் பெண்களை, மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதும் சில இடங்களில் நடக்கின்றன. பைக் ரேஸ் இளைஞர்கள், மாணவர்களை தடுக்கப் போலீஸாரும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர் என்று பொதுமக்களும், ஓட்டுநர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். போலீஸாரின் கண்முன்னே இது போன்ற அட்டகாசம் நடந்து வருவது பெண்கள், கல்லூரி மாணவியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் காவல்துறை உயா் அதிகாரியின் கார் முன்பாகவே சில மாணவர்கள் பைக் ரேஸ் சென்றனர். நடந்து சென்ற மாணவிகளை அருகில் சென்று உரசியவாறு சென்றதை அந்த காவல் அதிகாரி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து கல்லூரிகள் அமைந்திருக்கும் பகுதிகளிலும், இளைஞர்கள் பைக் ரேஸ் செல்லும் சாலைகளையும் காலை, மாலை தீவிர மாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து சட்டம், ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இரு சக்கர வாகனங்களை வேக மாக ஓட்டும் இளைஞர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல் ஆணையரின் உத்தரவால் தொடர்ந்து பைக் ரேஸ் இளைஞர்களைப் பிடிக்க, தீவிர வாகனத் தணிக்கையும் நடக்கிறது. அதிக குதிரை சக்தி கொண்ட பைக் வைத்திருப்பவர்களில் 10 சதவீதம் பேர் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இவர்களைப் பிடிக்க பலரது வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ரேஸ் செல்வோர் குறித்த தகவல், பதிவெண் வாகனங் களை காவல் நிலையத்துக்கு தெரிவிக்கலாம் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close