[X] Close

ஒருதலை ராகம் - அப்பவே அப்படி கதை!: ரிலீசாகி இன்றுடன் 39 வருடங்கள்!


39

  • kamadenu
  • Posted: 02 May, 2019 11:01 am
  • அ+ அ-

ஸ்ரீதர் அப்படி பேசியிருக்கக்கூடாது. பெரும்பாலும் போதையில் பேசப்படும் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம். ஆனால் அதே நேரம் இல்லையென்றும் சொல்ல வேண்டும். சுரேந்தர் சிறந்த குடிகாரன். வியாபாரி. மற்றவர்களை குடிக்க வைத்து அதில் ஆதாயம் அடைய முடியுமா என்று கணக்கு போடுகிறவன். சும்மாவே மற்றவர்கள் தன்னை புகழ வேண்டுமென்று விரும்புகிறவன். சரக்கு வாங்கிக் கொடுத்து கூவவில்லை என்றால் எப்படி?.

“சார். படம் என்னுது. கிரியேட்டர் நானு. எனக்கு தெரியும்” என்றதுதான் தவறாகியது.

“ஓ.. கிரியேட்டரா நீங்க? ஓட்டல் வாசல்ல வந்து நின்னப்ப கிரியேட்டர்னு இதே தைரியத்தோட பேச முடிஞ்சுதா? எவனோ ஒருத்தன் நீ சொன்ன கதைய நம்பி கோடி கோடியா பணம் போட்டு படமெடுத்தா நீ கிரியேட்டர்னு மார் தட்டிப்பீங்க?” என்று கோபத்துடன் சுரேந்தர் குரல் உயர்த்தினார்.

“சார்.. நான் அப்படி சொல்லலை சார்..” என்றான் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் தழைந்த குரல் சுரேந்தரின் ஈகோவை உற்சாகப்படுத்தியது.  “நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன் டைரக்டர். ரொம்பத்தான் ஆடுறீங்க. எல்லாரும் பாராட்டுறாங்கனு திமிராயிருச்சோ?”

“சார்.. என்னா சார்.. இதெல்லாம் என்னைப் பொறுத்த வரைக்கும் என் மண்டையில ஏத்திக்க மாட்டேன். எப்ப உதயம் தியேட்டர்ல காமன் ஆடியன்ஸ் படம் பார்த்து நல்லாருக்குனு சொல்வான் பாருங்க அதான் ரிசல்ட். இங்க ஆயிரம் பேர் என்ன சொன்னாலும் அது நம்மை சந்தோஷப்படுத்துற இண்டென்ஷன் இருக்கும். ஆனா ஆடியன்ஸுக்கு அது கிடையாது. நாம யாருனு தெரியாது. அவன் படம் பார்த்து சந்தோஷமானா கொண்டாடப் போறான். இல்லாட்டி. கடவுள் விட்ட வழி”

இன்னமும் தழைந்த ஸ்ரீதரின் குரல் சுரேந்தர் குடித்த ரெமி மார்டினை விட போதை கொடுக்க, “ஒரு படம் முடிக்கிறதுக்கு உள்ள எத்தன ஆட்டம் ஆடுறீங்க. தயாரிப்பாளர் சொல்லுறத கேட்குறது இல்லை.”

“என்ன சார் கேட்காம போயிட்டேன்?”

“என் ப்ரெண்ட் டப்பிங் பேச வேணாங்குறீங்க? அவர் என்கிட்ட வந்து குறைப்பட்டுக்கிறாரு. பார்த்துப் பண்ணுங்கன்னா இல்லாத பர்பெக்‌ஷன் எல்லாம் பேசுறீங்க?”

“சார். நீங்களே ஷூட்டிங்கில பார்த்தீங்க இல்லை. அவர் எப்படி நம்ம நேரத்தையும், பணத்தையும் காலி பண்ணார்னு. அது தவிர அவரோட குரல் செட்டாகல சார். அவரோட மோசமான நடிப்பை நல்ல குரல் வச்சித்தான் சரி பண்ணனும்.”

“அவரு என்ன ஹீரோவா?”

“ஹீரோவோ ஜீரோவோ. ஒரு டைரக்டரா என்னால என்ன பர்பெக்‌ஷன் கொடுக்க முடியும்னு பார்க்குறது என் கடமை”

“அப்ப எங்களுக்கு எல்லாம் கடமையில்லை”

“சார்.. என்ன சார் இப்படி பேசினா அப்படி பேசுறீங்க?. சரி விடுங்க நான் கிளம்புறேன்.” என்று எழுந்தான் ஸ்ரீதர்.

“அல்லோ.. உக்காரு. இங்க நான் தான் எல்லாமே. நீ போறதா வேணாமான்னு முடிவெடுக்குறதுக்கு” என்று கட்டளையாய் கர்ஜித்தார். அவர் குரல் இத்தனை நாள் கேட்டது போல இல்லை. அதை உணர்ந்த நெருங்கிய அல்லக்கைகள் சட்டென ஸ்ரீதரின் பக்கம் வந்து நின்று கையை பிடித்து அழுத்தி “உட்காருங்க” என்றார்கள். சுரேந்தரின் பின்னால் நின்றிருந்த மேனேஜர் சேது கண்களால் எழுந்து கொள்ளாதே உட்கார்’ என்று சொன்னார். அமைதியாய் உட்கார்ந்தான்.

‘அவ்வளவு கோவக்காரனோ?”

“விடுங்க சார். டைரக்டர் ஏதோ போதையில பேசிப்பிட்டாரு” என்று சேது டைவர்ட் பண்ண முயன்றார்.

”ம்ம்.. அதெல்லாம் தெரியாம பேச மாட்டாரு. தெளிவா தெரிஞ்சேத்தான் பேசுவாரு. அன்னைக்கு டப்பிங் பிரச்சனையின் போது சரி அவரு குரல் தான் சரியில்லை வேணும்னா நான் பேசட்டுமானு கேட்டதுக்கு படம் நல்லா வர வேண்டாமா?னு என் கிட்டயே கேட்குறான். ம்ம்ம்.. என்னா நக்கல் இருக்கும்”

“சார். அது சும்மா ஜாலியா காமெடி பண்ணேன்”

“ஓ.. ப்ரோடியூசரை விட உனக்கு ரொம்ப பொறுப்பா? “

“ நிச்சயமா சார். “

“அப்ப எனக்கு எல்லாம் பொறுப்பு இல்லைங்கிற?’

என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை. ஸ்ரீதருக்கு. வேண்டுமென்றே ஏட்டிக்கு போட்டியாய் பேசுகிறார் என்று புரிகிறது. வேண்டாம் என்று அமைதியாய் கிளம்பிப் போகலாம் என்றாலும் விட மாட்டேன் என்கிறார். பதில் சொல்லாமல் இருந்து பார்ப்போம் என்று கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாய் இருந்தான். அது சுரேந்தரின் விவாத வேட்கையை அதிகரித்தது.

“.......தா எனக்கில்லாத பொறுப்பு உனக்கு இருக்குங்கிறயானு கேட்டா பதில் சொல்ற?’ என்று கெட்ட வார்த்தைக்கும், ஒருமைக்கும் மாறினார். கோபம் தலைக்கேறியது ஸ்ரீதருக்கு. சேது சட்டென “அண்ணே.. வாங்க. .அவருதான் சின்னப் பையன் தெரியாம பேசிப்பிட்டாரு.. அதைப் போய் பெரிசு பண்ணிட்டு. சார்.. நீங்க கிளம்புங்க.” என்று நிலமையை சகஜமாக்கி சுரேந்தரை அங்கிருந்த எழுப்ப முயன்றார். ஸ்ரீதரைப் பார்க்க பாவமாயிருந்தது.

எது நடக்ககூடாது என்று இத்தனை நாள் நினைத்திருந்தாரோ அது நடந்து கொண்டிருப்பதை நினைத்து வருந்த ஆரம்பித்தார். இதற்கு முன்னால் எடுக்கப்பட்டு வெளியிடப்படாமல் இருக்கும் ரெண்டு படங்களின் இயக்குனரிடமும் இப்படித்தான் படம் வெளியாகும் நேரத்தில் எதையாவது  பேசி பஞ்சாயத்து ஆகி, ‘நீ எப்படி டைரக்டர் ஆகிடுறனு பாக்குறேன்’ என்ற வீராப்பில் படத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்.

”அண்ணே டைரக்டர்கிட்ட பிரச்சனைன்னா அதுக்காக படத்தை நிறுத்தி வைச்சா நம்ப பணம் தாண்ணே லாஸு?”

”மயிராப் போச்சு பணம். இந்த ரெண்டு படத்துக்கு செலவு பண்ண நாலு கோடி மயிராப் போச்சுனு போய்ட்டேயிருப்பேன். ஆனா அவனுக்கு வாழ்க்கை. அப்படி இருக்குறவன் எப்படி நடந்துக்கணும்?. எதிர்த்து பேசலாமா? கால்ல வந்து விழுந்து என்னுத எடுத்து கையில பிடிச்சிட்டு கெஞ்ச சொல்லு. யோசிக்கலாம்” என்று அந்த இயக்குனரை வைத்துக் கொண்டே சொன்னவர்தான். அதன் பிறகு அப்பட இயக்குனர்கள் இது வரை திரும்பி வந்து பார்த்ததில்லை.

சேதுவுக்கு ஸ்ரீதரின் படம்  ஆரம்பித்ததிலிருந்தே இது நல்லா வரும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதற்கு காரணம் சுரேந்தரின் டார்சர்களை மிக லாவகமாய் ஸ்ரீதர் கையாண்ட விதம்தான் என்று தன் சகாக்களிடம் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஒரு படத்தை எழுதி இயக்குவதை விட, மிக முக்கியமான விஷயம் அத்திரைப்படத்தை சார்ந்தவர்களை தான் விரும்பும் படத்துக்கு வேலை செய்ய வைப்பது.  கதை மாந்தர்கள் நாம் உருவாக்குகிறவர்கள். நமக்கு ஏற்றார்ப் போல செயல்பட வைக்கலாம். நிஜ மாந்தர்கள் அப்படியல்ல. அவர்கள் எழுதும் திரைக்கதை எதிர் திரைக்கதை எழுதியாக வேண்டும். அதுவும் திறம்பட என்கிற போது அது பெரிய சவால் தான்.

நிச்சயம் இதற்கு முன்னால் அவர்கள் எடுத்த படத்தின் இயக்குனர்களை விட செலவு குறைவாகவும், எல்லா விஷயத்திலேயும் முயற்சி எடுத்து அல்லக்கைகள் சொன்னது போல நிஜமாவே எடுத்த நாலில் இதுதான் சினிமாவாகவே வந்திருக்கிறது. எல்லா படங்களுக்கும் ஏற்பட்ட கதி இந்த படத்துக்கும் ஆகிவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாய் இருந்தாதால் தான் அவ்வப்போது ஸ்ரீதர் பொறுமையிழக்கும் போது கொஞ்சம் பேசி அடக்கியிருக்கிறார்.

ஆனால் சுரேந்தர் தெரிந்தே அவனை சீண்டுகிறார். இப்படி பணத்தால் அடித்து, வாய்ப்பு கொடுத்து, அவனின் வாழ்க்கையை கேள்விகுறியாக்குவதில் என்ன நியாயம்? சந்தோஷமிருக்கிறது என்று அவருக்கு புரியவில்லை. “ஒருமையில் ஸ்ரீதரை அழைத்ததும் பதற்றமடைந்தார். கண்ணாடி விரிசலை மீறி உடையப் போகிற நேரம்.

“டைரக்டர் நீங்க கிளம்புங்க. ஓவராயிருச்சு. எல்லாருக்கும் ம்ம்.. கிளம்புங்க” என்று ஸ்ரீதரை எழுப்ப, “டேய்.. சேது. என்னா.. என்னா நீ அவனை கிளப்புற? பேசிடிருக்கமில்லை” என்றார் சுரேந்தர். “வேணாம்னே விடுங்க. கிளம்பட்டும்” என்று சேது மறுத்துப் பேச.. “நான் சொல்லிட்டேயிருக்கேன் நீ என்ன பெரிய புளுத்தியா?” என்று கத்தியபடி டேபிள் மேல் இருந்த ரெமி மார்ட்டின் பாட்டிலை தரையில் ஓங்கி அடித்தார். உடைந்த பாட்டிலின் துண்டு பக்கத்திலிருந்த எல்.ஈ.டி டிவியின் மேல் பட்டு அது விரிசல் விட்டது. ஒரு கணம் ஆழ்ந்த அமைதி அங்கே நிலவியிருந்தது. ஸ்ரீதர் விதிர்த்துப் போய் நின்றான்.

“சொல்றா.. எனக்கில்லாத பொறுப்பு உனக்கு என்ன இருந்துச்சு. சொல்லு?” என்றபடி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து முகத்துக்கு எதிரே புகையைவிட்டு.. ‘ம்ம்ம்..சொல்லு” என்றார் சுரேந்தர்.

“என்னத்த சொல்லணும் சார். உங்களுக்கு எப்படியோ தெரியாது. என்னைப் பொறுத்த வரை இது என் படம். பணம் வேணா உங்களுதா இருக்கலாம். அப்படி நினைச்சதுனாலத்தான். ஒரு படம் நல்லா வரணும்னு டைரக்டர் மட்டும் நினைச்சா பத்தாது சார். மொத்த டீமும் நினைக்கணும். முக்கியமா பணம் போடுற தயாரிப்பாளர் நினைக்கணும்.

சொல்லிக் காட்டுறேன்னு நினைக்காதீங்க, பணம் போடுறவர் இந்த காசு போனா மயிராப் போச்சுன்னு சொல்லிட்டே காசு போட்டா எப்படி விளங்கும் ஒரு ப்ராஜெக்ட்?. இந்த ஆட்டிட்டியூடோட நாலு படமில்லை. நானூறு படமெடுத்தாலும் யாருக்கும் பிரயோஜனப்படாது சார்.

நீங்க என்னை அவமானப் படுத்துறதா கெட்டவார்த்தையில திட்டலாம். உண்மைய சொல்லணும்னா.. எப்ப ஒருத்தனை நாம தரம் தாழ்ந்து கெட்ட வார்த்தையில திட்டுறோமோ அப்பவே நாம தரம் தாழ்ந்து போயிடறோம்னு எங்கம்மா சொல்லுவாங்க. நான் என்னை தாழ்த்திக்க விரும்பலை. நான் வர்றேன்” என்று கிளம்பினான் ஸ்ரீதர்.

“அப்படியே போ. உன் படமும் என் பொட்டிக்குள்ளத்தான்” என்று வேட்டியை தூக்கி காட்டினார் சுரேந்தர். ஸ்ரீதருக்கு அழுகை வந்தது. “மயிரா போச்சு” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென படியிறங்கினான்.

இதை எதிர்பார்க்காத சுரேந்தர் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார். சேது தலையில் அடித்துக் கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்தார். அல்லக்கைகள் திடுக்கிட்டு ஸ்ரீதர் போன திசையையும், சுரேந்தரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “என் கால்ல வந்து விழுந்து அழ வைக்குறேனா இல்லையானு பாரு” என்று கறுவினார் சுரேந்தர்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 49 - https://bit.ly/2CIHmXv

பகுதி 48 - https://bit.ly/2CJG0vQ

பகுதி 47 - https://bit.ly/2TGWsT9

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close