[X] Close

எதிர்க்கட்சிகளை குறிவைத்து சோதனை: தேர்தல் ஆணையம் மீது தினகரன் குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 09:37 am
  • அ+ அ-

மணியின் மனைவி பேசவில்லை. மணியின் அப்பாதான் போனில் பேசினார். “வணக்கம் ராம்ராஜ் சார்.”

‘வணக்கம். சார். அம்மா எப்படி இருக்காங்க?”

“இருக்கோங்கிறத தவிர வேற என்னத்த சொல்றது?. சரி.. நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. இந்த சினிமா பத்தி எங்களுக்கு ஏதும் தெரியாது. ஏற்கனவே கோடிக்கணக்குல வர வேண்டியது எல்லாம் கணக்கு வழக்கில்லாம இந்த படத்துக்காக கொடுத்துட்டோம்னு கதை சொல்லுறானுங்க. அதையெல்லாம் பாக்கணும். இதும் நடுவுல பைனான்ஸியர் ஒருத்தரு எனக்கு போன் பண்ணி படத்தும் மேல நீங்க கடன் கேட்டதா சொன்னாரு.”

“அய்யா.. தப்பா நினைக்காதீங்க. உங்க படம் உங்களுக்கு தெரியாம எதும் நடக்காது. மணி சார் இல்லைங்கிறதுனால உங்க கிட்ட பணம் கேட்கவும் மனசு கேட்கலை. அதான் பைனான்ஸ் எல்லாம் தயாரா ரெடியாயிருந்துச்சுன்னா உங்களாண்ட வந்து பேசி மணி சார் ஆசைப்பட்ட படத்த முடிச்சிரலாம்னு யோசிச்சு பேசி வச்சிருந்தேன். மத்தபடி படத்துமேல உங்களுக்கு தெரியாம ஒண்ணும் செய்யலைங்க” என்றார் பதட்டத்துடன்.

“அய்யோ. தப்பா நான் ஏதும் சொல்லலை. உங்க பிரச்சனை உங்களுக்கு. அதான் யோசிச்சு பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். இப்போதைக்கு படத்த நிறுத்தி வையுங்க. உங்களூக்கு சம்பள பாக்கி ஏதாச்சும் இருந்துச்சுன்னா சொல்லுங்க. செட்டில் பண்ணச் சொல்லுறேன். மத்தபடி ஆபீஸ் வாடகை அது இது எல்லாம் அட்வான்ஸ்ல கழிச்சுக்க சொல்லிருங்க. நான் அடுத்த வாரம் சென்னை வர்றேன். அப்ப டீடெயிலா பேசுறேன்’ என்று போனை வைத்துவிட்டார்.

கண்கள் இருண்டது என்பது எல்லாம் எழுதும் போது நல்ல விவரணையாய் இருக்கும். ஆனால் அதற்கும் மேலே இருந்தது ராமராஜுக்கு. முதல் படம் ட்ராப். இத்தனை வருடமாய் காத்திருந்தது இப்படி நடுத்தெருவில் நிற்கத்தானா? மீண்டும் இயக்குனராய் ஆகிவிட்டு, மீண்டும் இணை இயக்குனராய் வேலை செய்வதே கொஞ்சம் டீப்ரோமோஷன் போலத்தான். அதிலும் முதல் படம் அரைகுறையாய் நின்று போன இயக்குனர்கள் நிலை இன்னும் பாவம்.

எத்தனையோ முதல் படம் பாதியில் நின்று போன இயக்குனர்கள் மீண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணிவிட முடியும். ராமராஜின் நண்பன் ஒருவன் அப்படித்தான் இது வரை எட்டுபடங்கள் தொடங்கப்பட்டு, சிலது பூஜையுடனோ, அல்லது பத்து நாள் ஷுட்டிங்கோடோ நின்று போயிருக்கிறது. அவனுக்கு கதை எழுத வரும். அதுதான் அவனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ராமராஜுக்கு பயமில்லை. ஸ்கூல் படித்துவிட்டு படம் இயக்கவரும் புதியவர்கள் இருக்கும் வரை ராமராஜ் போன்ற திறமையாளர்களுக்கு எப்போதும் வாய்ப்பு இருக்கத்தான் செய்தாலும். எத்தனை நாள் இவர்களுக்கு எடுபிடியாய் இருந்து கொண்டிருப்பது என்கிற வெறுமை வாட்டியெடுக்கும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசித்து பிரயோஜனமில்லை. விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல வேண்டும்.

இதையெல்லாம் மீறி இன்னும் ஒரு முறை அவர்களின் துக்கம் குறைந்த பிறகு ஒரு முறை பேசிப் பார்த்தால் நிச்சயம் நல்ல பாசிட்டிவான முடிவு வர சான்ஸ் இருக்கிறது என்கிற நம்பிக்கையும் ஓரமாய் ஒட்டிக் கொண்டிருக்கத்தான் செய்தது.

ஆபீஸ் வந்து எல்லாரையும் அழைத்தார். பத்ரி அவர் என்ன சொல்கிறார் என்று கேட்காமலேயே “சார். நான் என்னைக்கும் உங்க அஸிஸ்டெண்ட்தான்’ என்றான். கேட்ட மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது ராமராஜுக்கு.

அவர் கண்களில் நீரைப் பார்த்து பத்ரியும் அழ ஆரம்பித்தான். “என்னா சார். படம் ட்ராப்பா?” என்று அழுதபடி கேட்டான். அவனைப் பார்க்க பாவமாய் இருந்தது. தொண்டை கட்டியது ராமராஜுக்கு. தொண்டையை கனைத்தபடி, “அப்படின்னு உடனே எல்லாம் சொல்ல முடியாது. இப்போதைக்கு நாம ஏதும் அவங்களை கேட்குற நிலையில இல்லை.

கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் பார்க்கணும். ஒரு அஞ்சாறு மாசம் கூட ஆகலாம். பட் நம்பிக்கையை விட்டுற கூடாது தம்பி. ந்டக்கும். நாம எல்லாரும் கடுமையா உழைச்சிருக்கோம். நிச்சயம் அதுக்கான பலன் கிடைச்சே தீரும்” என்றார்.

ராமுக்கும் நித்யாவுக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நேற்றைய நம்பிக்கை சட்டென மறைந்து காற்றானது. மீண்டும் டிஜெக்டட் மூடுக்கு போனான். தற்போது இருக்கிற ஒரே நம்பிக்கை ஸ்ரீதரின் படம் தான்.

*************************

அன்றைக்கு போட்ட போட்டில் வின்செண்ட் அதற்கு பிறகு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் படத்தை முடித்தான். ஸ்பெஷல் எஃபெக்ட், சிஜி எல்லாம் முடிந்து அவுட் செக் க்யூப் தியேட்டரில் தயாரிப்பாளர் ஷோ முடிவானது. சுரேந்தர் அவசர அவசரமாய் கனடாவிலிருந்து வந்திருந்தார். வின்செண்ட் இந்த முறை அவருடன் ஏதும் பெரிதாய் ஈஷிக் கொண்டிருக்காமல் அமைதியாய் தள்ளியிருந்தான்.

ஸ்ரீதர் ஏதாவது சொல்லியிருக்கலாம் என்கிற பயம் கூட இருந்தது. அது மட்டுமில்லாமல் இன்னும் ரெண்டு லட்ச ரூபாய் பாக்கி வேறு இருப்பதால் அமைதியாய் இருப்பது என்று முடிவெடுத்து ஒதுங்கியிருந்தான்.

தயாரிப்பு தரப்பு, நடிகர்களில் ராம் மட்டும் மற்றும் சுரேந்தரின் அல்லக்கைகளில் முக்கியமானவர்கள் மட்டுமே என மொத்தமே பத்து பேர் படம் பார்த்தார்கள். இடைவேளையின் போது ஏதும் பேசாமல் இருந்தார்கள். உள்ளே படம் ஓடும் போது வெளியே தம்மடித்துக் கொண்டிருந்தான். கார்க்கி மட்டும் உள்ளேயிருந்து கொண்டு அவ்வப்போது ‘காமெடி சீன் ஒர்க்கவுட் ஆகுது.”

‘இண்டர்வல் ப்ளாக் செம்மயா பீல் பண்ணுறங்க” என்று வாட்சப்பில் லைவ் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான். இடைவேளையில் ப்ரேமியிடம் எல்லாரும் ” செம்மையா நடிச்சிருக்கீங்க” கைகுலுக்கி பாராட்டினார்கள். ப்ரேமியின் முகத்தில் அதீத சந்தோஷம் .

அதே நேரத்தில் ராமைப் பற்றி யாரும் பேசவில்லை. நாயகியின் கேரக்டர் மீது அனுதாபம் வந்தால் நிச்சயம் செகண்ட் ஹாஃப் ஒர்க்கவுட் ஆகும் என்று ஸ்ரீதர் ஸ்கிர்ப்டில் வைத்திருந்த நம்பிக்கை ஜெயித்திருப்பது குறித்து சந்தோஷம் அடைந்தான். பாராட்டுக்களுக்கு எந்தவிதமான ரியாக்‌ஷனையும் காட்டாமல் இருந்தான்.

இந்த ப்ரிவியூவில் கருத்து சொல்கிறவர்களில் 99 சதவிகிதம் பேர் பாராட்டியே தீர வேண்டும் என்று தேடிப் பிடித்து பாராட்டுவார்கள் இல்லை பொதுவாய் பாராட்டிவிட்டு போவார்கள். அதனால் அந்த ஃபீட் பேக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அடிக்கடி சொல்வான். அது அவனுள் ஏறியிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நான்கு சிகரெட்டும் மூன்றும் டீயும் குடித்திருந்தான். காசி உடனிருந்தாலும் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளாமலேயே இருந்தார்கள். சரியாய் படம் முடிய வரும் நேரம் கதவருகில் காத்து நின்றார்கள். வந்தவர்கள் அனைவரும் ஸ்ரீதருக்கு கை கொடுத்தார்கள்.

சுரேந்தர் ஏதும் சொல்லாமல் அனைவரையும் ஒர் மேம்போக்கான பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். வந்திருந்த அல்லக்கைகளில் சில பேருக்கு ஸ்ரீதர் மீது பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. படம் பார்த்துவிட்டு உற்சாகமாகி, “அண்ணே நீங்க இதுவரைக்கும் எடுத்ததுலேயே இதான் சினிமாவா இருக்கு. டைரக்டர் கலக்கிட்டாருன்ணே” என்றார்கள்.

“அப்ப நான் இதுக்கு முன்னாடி எடுத்தது எல்லாம் சினிமா இல்லையா?” என்று சுரேந்தர் கேட்ட மாத்திரத்தில் அவர்களின் தவறு புரிந்து “அட.. அப்படி சொல்றீங்கண்ணே.. டைரக்டர் கதை சொன்ன போது எடுக்க அத்தனை வசதி பண்ணிக் கொடுத்தீங்க. அவரு கேட்டத எல்லாம் கொடுத்தீங்க அது இல்லைன்னா எப்பூடி. இந்த் வாட்டி நீங்க புல்லா ஷூட்டிங்குல இருந்தது பெரிய ப்ளஸ்” என்று சொம்பை அடிக்க ஆர்மபிக்க, இதற்கு முன் அவர்கள் பாராட்டியது ஏதும் ஸ்ரீதர் தனக்குள் ஏற்றிக் கொள்ளவில்லை.

சுரேந்தர் அன்றைக்கு இரவு பார்ட்டி வைத்தார். தினமும் அவர் குடிப்பதுதான் என்றாலும், ஸ்ரீதர் படம் ஆரம்பித்ததிலிருந்து அவருடன் குடிப்பதை அவாய்ட் செய்திருந்தான். தயாரிப்பாளரோடு குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. ஆனால் ஷுட்டிங் ந்டக்கும் போது குடிப்பது உடல் நலத்துக்கு மட்டுமல்ல படத்துக்கும் கேடாய் முடிய அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவாய்ட் செய்திருந்தான். இன்றைக்கு சுரேந்தர் சந்தோஷமாய் இருந்தார்.

எப்பவும் எடக்கு மடக்காய் பதில் சொல்லிக் கொண்டிருப்பவர் வரும் வழியிலும், தண்ணியடிக்கும் போதும் மற்றவர்களை பேச விட்டுக் கொண்டிருந்தார். அனைவரும் பொதுவாய் படத்தில் அது சூப்பர் இது சூப்பர் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அதை ஸ்ரீதர் தாங்கமாட்டாமல் “படத்துல போர்னு எந்தெந்த இடமிருக்கு?” என்று கேட்டான்.

”அப்படியெல்லாம் இல்லீங்க. நிச்சயம் ஏதாச்சும் இருக்கும். அப்படி இருந்தாத்தான் அடுத்த சினிமா இல்லாட்டி இதான் உலகத்தோட கடைசி சினிமா” என்றான்.

“டைரக்டர். ரொம்ப தலையில ஏத்திக்காதீங்க. நம்ம படம்னு நாலு வார்த்தை பாராட்டி சொன்னதும். தன்னடக்கமா இருக்குறதா காட்டிக்க குறையச் சொல்லுனு சீன் போடுறீங்களா?” என்று சுரேந்தர் இன்றைய ராவடியை ஆரம்பித்தார். தண்ணியடிக்காமல் இருந்திருந்தால் ஸ்ரீதர் அமைதியாய் இருந்திருப்பான். ஆனால் பேசிவிட்டான். அது அவன் படத்துக்கு பெரிய தடையாய் வருமென்று எதிர்பார்க்கவில்லை.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 48https://bit.ly/2CJG0vQ

பகுதி 47 - https://bit.ly/2TGWsT9

பகுதி 46 - https://bit.ly/2WZsk7v

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close