[X] Close

மோடிக்கு எதிராக யார்? என்ற கேள்வி 2024-ல் வரலாம் வரும் 2019-ல் வாய்ப்பேயில்லை : பிரதமர் மோடி பேட்டி


2024-2019

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 20:46 pm
  • அ+ அ-

’கம்ப்ளெயிண்ட் ஆயிருச்சுப் போல பாலிமர்ல நியூஸ் போட்டிருக்கான்’ என்று அல்லக்கை சொன்ன மாத்திரத்தில சுப்புராஜு ”டேய்.. கம்ப்ளெயிண்ட் ஆயிருச்சாம். சீக்கிரம் டிஸ்போஸ் செய்யணும். வா.. வா..” என்று உலுக்கினான்.

திடுக்கிட்டு நிலைக்கு திரும்பிய ரவி என்ன சொன்னான் என்று புரிந்து சட்டென “சரி உடனே கிளம்பலாம். பாடி வாசனை வர்றாப் போல தெரியுது” என்று பதறிப் போய் அனைவரும் சடுதியில் ரெடியானார்கள்.

வண்டி கிளம்பி ஒன்னரை மணி நேரத்தில் திருப்பூர் மணியின் கார் போலீசாரால் மடக்கப்பட்டது. திருப்பூர் மணியின் உடல் அவரது வண்டியின் டிக்கியில் கண்டெடுக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

எப்படி தங்களை வளைத்தார்கள்? என்று சுப்புராஜு யோசித்துக் கொண்டிருந்த போது இளம் அல்லக்கை “அண்ணே… இந்த மாடல் வண்டில ஜி.பி.எஸ் இருக்குனு கூகுள்ல போட்டிருக்கான்” என்றான்.

*************************

திருப்பூர் மணியின் சாவு பத்திரிக்கைகளில் பெரிதாய் பேசப்பட்டது. அவரின் சினிமாவை விட அவரின் தொழில் பின்புலம், அரசியல் பின்புலம் அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வந்தது. . மணியின் குடும்பம் மொத்தமும் அழக்கூட திராணியில்லாமல் அதிர்ச்சியில் இருந்தார்கள். ராமராஜுக்கு தன் எதிர்காலம் குறித்து பெரும் கேள்வி எழுந்திருந்தது.

நல்ல காலத்திலேயே செண்டிமெண்டால் கட்டமைக்கப்பட்டது சினிமா. இதில் முதல் படம் முக்கால் வாசியில் நின்றது மட்டுமில்லாமல், தயாரிப்பாளர் இறந்துவிட்டார். அதிலும் அகால மரணம் எனும் போது ராசியில்லாதவன் என்று முத்திரைக்குத்த வசதியாய் போய்விடும். சவ ஊர்வலத்தில் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.

ராமிற்கும், நித்யாவுக்கும் இதை எப்படி எதிர் கொள்வது என்றே புரியவில்லை. இந்தப் படம் தொடருமா? தொடராதா? என்றே புரியாமல், யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல் இருந்தார்கள். திருப்பூரில் மணியின் தகனம் முடிந்து ரெண்டு நாள் அங்கேயே தங்கியிருந்தார்கள். மணியின் வீட்டிலிருந்து யாராவது கூப்பிட்டு பேசுவார்கள் என்ற எண்ணத்தில். ஆனால் யாரும் கூப்பிடவில்லை.

ஏற்கனவே அவரின் கணக்கு வழக்குகளை பார்த்த மாத்திரத்தில் வரவேண்டிய பண வகையராக்கள் கோடிக்கணக்கில் வெளியே இருப்பதும், அதை எப்படி பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். எதுவும் சொல்லாமல் சென்னை திரும்பி, மணியின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்கள். அடுத்து என்ன? என்று யோசனையாய் இருந்ததே தவிர யாரிடமும் பதில் இல்லை. ராமராஜ் மீதமிருக்கும் படத்தை முடிக்க யாரிடமாவது பைனான்ஸ் கேட்டுப் பார்க்கலாமா? என்ற யோசனையில் மூழ்கியிருந்தார்.

”சார்.. சாப்பாடு வாங்கி வரவா?” என்ற பத்ரியை நிமிர்ந்து பார்த்தவர். “இது என்னாடா கேள்வி?. வாங்கிரு. பணம் கேட்டா ரெண்டு நாள்ல தருவாங்கனு சொல்லு. மணி சார் ஆச நல்ல படம் பண்ணனும்னு அதை நிறைவேத்த வேணாம்?” என்ற போது அவர் குரல் தழுதழுத்திருந்தது.

*************************

வின்செண்ட் டி.ஐயின் போது ரஷ் பார்த்துவிட்டு “நான் வச்ச ஷாட்டையெல்லாம் தூக்கிட்டியா?. நான் டி.ஐ. பண்ண மாட்டேன். என்னை கேட்காம எப்படி தூக்குவ?” என்று கோபமாய் கத்தினான் அலுவலகம் வந்து. ஸ்ரீதர் அமைதியாய் “படத்துல எது இருக்கணும்? இருக்கக்கூடாதுனு டிசைட் பண்றது என் உரிமை. உன் வேலைய மட்டும் பார்த்துட்டு கிளம்பு” என்றான்.

”நான் டி.ஐ. பண்ண மாட்டேன். நீ எப்படி படம் முடிக்கிறேன்னு பாக்குறேன்” என்று சொன்னதும் ஸ்ரீதருக்கு எங்கிருந்த்தான் அத்தனை கோபம் வந்தது என்றே தெரியவில்லை. “அடிங் .. நிறுத்திருவியா? நிறுத்திப் பாருடா.. நீ ஆம்பளையா இருந்தா செய்து பாரு” என்று கிட்டத்தட்ட அடிக்க எழுந்தான். சேது சத்தம் கேட்டு வந்த் சட்டென ஸ்ரீதரை தடுத்திருக்காவிட்டால் அடி விழுந்தாலும் விழுந்திருக்கும்.

“விடுங்க சேது சார். நிறுத்திருவானாமில்லை. நீ இல்லாட்டி டி.ஐ. நடக்காதா? நான் வேற கேமராமேனை வச்சி பார்த்துக்குறேன்” என்றான்.

“நான் அசோசியேஷன்ல கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்”

“பண்ணித்தான் பாரேன். நான் உன்னால ஆன அத்தனை லாஸையும் கணக்கு போட்டு வச்சிருக்கேன். சாட்சிக்கு ப்ரொடக்‌ஷன் இருக்கு. ஒருமயிரும் புடுங்க முடியாது. நீ வெளிய போ. நான் பார்த்துக்கறேன் என்படத்தை” என்று வாசலை நோக்கி கை காட்டினான்.

“சார். எல்லா பிரச்சனையும் தாண்டி படம் முடியுற நேரத்தில இப்படி பேசுறது சரியில்லை. டைரக்டர் சொல்லுறது எதுவும் கூடக் கொறைய இல்லை. உங்களால நாங்க சார் கிட்ட வாங்கிட்ட திட்டெல்லாம் வெளிய சொல்ல முடியாது. அப்படி நீங்க நிறுத்தணுனு நினைச்ச ட்ரை பண்ணுங்க..நாங்க பாத்துக்குறோம்” என்ற சேதுவின் குரலைக் கேட்டது அதிர்ந்து போய் நின்றான் வின்செண்ட். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சட்டென அங்கிருந்து எழுந்து வாசல் நோக்கி போனான்.

“எங்க போற? அசோசியேஷனுக்கா? இல்லை டி.ஐ.க்கா?” என்ற ஸ்ரீதரிடம் எந்த பதிலும் சொல்லாமல் கிளம்பினான். “என்னா.. சார். எதும் பிரச்சனை பண்ணுவாரா? சார் கிட்ட ஒரு வார்த்த சொல்லிரட்டுமா?” என்று கொஞ்சம் பதைப்புடன் கேட்டார் சேது.

“இன்னும் ஒரு மணிநேரத்தில டி.ஐ.லேர்ந்து போன் வரலைன்னா.. சொல்லிருங்க” என்றான்.

*************************

”எந்த விதமான பைனான்ஸ் பைண்டிங் இல்லை. ஓப்பனா இருக்கு. ப்ரோடியூசர் கிட்ட பேசி என்.ஓ.சி வாங்கிக் கொடுக்குறேன். ஒரு முப்பதுலேர்ந்து நாப்பது ரூபா பைனான்ஸ் ரெடி பண்ணாப் போதும். படத்த முடிச்சிருவேன். அவங்ககிட்ட பணம் பிரச்சனையில்லை. ஆனா கேக்குற நிலமையில குடும்பம் இல்லை. அதுக்காகத்தான். நீங்க ஓக்கேன்னா என்னா பார்மாலிட்டினு சொல்லுங்க பேசி ரெடி பண்ணிடறேன்” என்ற மிகத் தன்மையாய் பேசினார் ராம்ராஜ்.

எதிரில் உட்கார்ந்திருந்த சேட்டு முகத்தில் எந்தவிதமான ரியாக்‌ஷனும் காட்டாமல் “ராமு உனக்கு தெரியாதது இல்லை. உன்னைத் தவிர எல்லாரும் புதுசு. நீ கேக்குற பணத்தை வச்சி படத்த முடிச்சாக் கூட என்னா வியாபாரம் ஆவுனு நினைக்கிறே?.ரிலீஸ் பண்ண காசு வேணாம்? அதுக்கு ஒரு ருபா இல்லாம எப்படி படம் முடியும்? அத்தினி வியாபாரம் ஆவாதுனு உனக்கும் தெரியும்” என்றவரை மறித்து ராமராஜ் ஏதோ சொல்ல வர “இப்ப என்னா சொல்லப்போறே? என் படம் நல்ல படம். நிச்சயமா நல்லா ஓடும்னுதானே?

நல்ல படம் என்னிக்கு ஓடியிருக்குது ராம்ராஜ். ஆர்டிஸ்ட் படத்துக்கே இப்ப எல்லாம் எவனும் அட்வான்ஸ் தர மாட்டேன்குறான். இதுல புது ஆர்டிஸ்ட வச்சி ரிலீஸ் பண்ணி, ரைட்ஸ் வித்து.. வேணும்னா..படம் முடிச்சிட்டு வா. எப்.எம்.எஸ். டிஜிட்டல் வச்சி ரிலீஸுக்கு பைனான்ஸ் பண்ணுறேன்” என்றார்.

ராமராஜுக்கு தெரியும். ஆனால் வேறு வழியில்லை. படம் முடிக்க ஏதாவது ஒரு வழியை தயார் செய்து கொண்டு புரோடியூசர் மனைவியை பார்த்தால் தான் ஏதாவது வழி வரும் என்று உறுதியாய் நம்பினார். வெளியே வந்தவர் போன் எடுத்து யாரையோ அழைத்தார். “தம்பி. நான் ராமராஜ் பேசுறேன். படத்து எப்.எம்.எஸ், சாட்டிலைட்., டிஜிட்டல் வச்சிட்டு பைனாஸ் பண்ணுறவங்க யாராச்சும் தெரியும்?” என்று கேட்டார்.

*************************

“எங்கயாச்சும் ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போய்ட்டு வருவோமா?” என்றாள் நித்யா.

”உசுரோட இருக்கிற ப்ரொடியூசரே படம் பண்ணி ரிலீஸ் பண்ண ததிங்கினத்தோம் போடுறான். ஆளே காலி பின்ன எப்படி?” என்று ராமின் காது படவே பேசினார்கள். ராமராஜின் படம் மட்டுமில்லாமல் இத்தனை நாள் எந்த பைனான்ஸ் பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த ஸ்ரீதரின் படமும் பைனான்ஸ் பிரச்சனை, டெக்னீஷ்யன்கள் பிரச்சனை, தயாரிப்பு தாமதம் எல்லாமும் சேர்ந்து அதன் வேகம் மெதுவாகிவிட்டது அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. ஒரே நேரத்தில் ரெண்டு படமும் அவன் திரை வாழ்க்கைக்கு கேள்விக்குறியாய் மாறியிருந்த நேரத்தில் நித்யாவின் கேள்வி எரிச்சலை மூட்டியது.

“ஊர் சுத்துற மூடுலயா இருக்கேன் நான்?”

“அலோ.. ஊருக்கு எங்கயாச்சும் போனா மைண்ட் டைவர்ட் ஆகும்னு கூப்டா சும்மா டென்ஷனாகுறே?. இப்ப நீ கவலைப் படறதுனால எதுனாச்சும் ஆவப் போகுதா?. ராமராஜ் படத்துக்கு 30 லட்சம் வேணுமாம். ஸ்ரீதர் படம் சென்சார் போகப் போவுது. ரிலீஸ் என்ன எப்பனு சொல்லிட்டேயிருக்காங்க. கேட்டா ப்ரொடியூசர் பைனான்ஸ் பிரச்சனைங்கிறாங்க. நம்மால என்ன பண்ண் முடியும்?”

“இந்த ரெண்டு படமும் ஏதாச்சும் பிரச்சனையில நின்னுருச்சுன்னா அவ்வளவுதான் என் கேரியர்” என்ற ராமின் கண்களில் லேசாய் கண்ணீர் துளிர்த்ததைப் பார்த்து பதறிவிட்டாள் நித்யா. அவனை அப்படியே அணைத்து “சீ.. என்னடா.. அழுகுற? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. எல்லாம் சரியாயிரும். சே.. அழுகாத?” என்றபடி ராமின் கண்களை அழுந்த துடைத்து விட்டாள்.

”நீ பொறக்கும் போது நடிகனாகனும்னு எல்லாம் பொறக்கலை. நானும் தான். காலம் நம்மளை அதும் போக்குல கூட்டிட்டு போகுது. நல்லதோ கெட்டதோ எல்லா விஷயமும் அத்தனை ஈஸியா ஒரே நாள்ல நடக்குறது இல்லை. நீ எனக்கு கிடைக்க நான் என் அப்பா அம்மாவை இழக்க வேண்டியிருக்கு. இப்படி ஒரு ப்ரெஷர் நமக்கு வரதுன்னா.. அது சரியா நம்மளை கண்ட்ரோல்ல வச்சிக்கத்தான். ஸோ.. எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். உன்னை நான் ப்ரெஷ்ஷா மாத்தவா?” என்று அவன் மடி மேல் அவனுக்கு நேராய் அமர்ந்து அவன் இதழ்களை கவ்வி முத்தமிட்டாள்.

“சரியாயிரும்ங்கிறயா?”

“ஏன் என் முத்தம் டேஸ்டா இல்லையா?”

“என்னாடி இது கேள்வி?”

“எவனாச்சும் இத்தனை க்ளோஸா ஒருத்தி உக்காந்து கிஸ்ஸடிச்சா சரியாயிருமானு கேள்வி கேட்டா என்னா அர்த்தம்? டேஸ்டா இல்லைன்னுதானே அர்த்தம். வேணும்னா ஒரு ப்ரெஞ்சு கிஸ் தரட்டா?” என்று தன் நாக்கைத் துருத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தாள். காற்றில் நம்பிக்கை இருந்தது.

அதே நேரத்தில் ராமராஜுக்கு மணியின் மனைவி போன் செய்தாள்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 47 - https://bit.ly/2TGWsT9

பகுதி 46 - https://bit.ly/2WZsk7v

பகுதி 45 - https://bit.ly/2UnoELO

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close