[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 41 – மூர்க்கம்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 25 Jan, 2019 11:18 am
  • அ+ அ-

”நேத்து நடக்கலை” என்ற ப்ரேமியை ஆச்சர்யத்துடன் பார்த்தான் ஸ்ரீதர்.  ’அப்படியா?’ என்பது போல தலையாட்டிக் கேட்டான். அவள் கண்கள் பூராவும் மகிழ்ச்சியாய் ரகசியமாய் ஆமாம் என தலையாட்டினாள்.

தனக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று ஸ்ரீதருக்கு தோன்றியது. இவர்களிருவரது ரியாக்‌ஷன்களை சுரேந்தரின் அல்லக்கை ஒருவன் கவனித்துக் கொண்டிருந்தான். 

அடுத்தடுத்த ஷாட்கள் போய்க் கொண்டேயிருக்க, சுரேந்தரே “என்ன டைரக்டரே கேப்பே விடாம ஷூட் போயிட்டிருக்கு?’ என்று கேட்டார். அதற்கும் பதில் சொல்லாமல் வேலையில் மூழ்கியிருக்க, ப்ரேக்கின் போது ப்ரேமியின் கேரவனுக்குள் நுழைந்துவிட்டு அரை மணி நேரம் லேட்டாய்த்தான் வெளியே வந்தார். ப்ரேக் முடிந்து ப்ரேமி வரும் போது முகம் வாட்டமாகவேயில்லை.  சுரேந்தரின் முகம் கடுகடுவென இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் அவர்களது ஷுட்டிங் வேலைகளுக்கிடையே அரை மணிகொருதரம் சுரேந்தர் அழைப்பதாய் ப்ரேமிக்கு தகவல் வந்து கொண்டேயிருக்க, ஒவ்வொரு முறை போன் பேசிவிட்டு வரும் போதும் அவள் முகம் வழக்கமாய் இருக்காது. திரும்ப அவள் செட்டிலாவதற்கு சிறிது நேரம் பிடிக்கும். 

அவளுடன் தனியாய் பேச ஸ்ரீதருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. பெரும்பாலும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள் வார்த்தைகள் மூலம் தெரியப்படுத்திக் கொண்டதுதான். இரவில் ஷூட் முடிந்து போனாலும் கூடவே சித்தி வேறு சேர்ந்து கொள்வதாகவும், தனியே பேசவே முடியவில்லை. என்றாள்.  என்ன நடந்தது அன்னைக்கு? என்று மெசேஜ் போட்டான். நீ சொன்னது போல தான் செய்தேன் என்று  ஸ்மைலியோடு பதில் அனுப்பினாள்.

‘இன்னைக்கு ராத்திரி பேசுறேன்” என்று பதில் மேசேஜ் அனுப்பிவிட்டு வேலையில் மூழ்கினான்.

இன்னும் ரெண்டு நாள் மட்டுமே ஷூட் இருக்கிற படியால் அதற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாய் செய்துவிட்டு அறைக்குள் வரும் போது மணி பண்ணிரெண்டு. களைப்பாய் இருந்தாலும், ப்ரேமி தனக்காக காத்திருப்பாள் என்று நினைத்து கால் செய்தான்.  “ஹலோ?” என்று ரகசியமாய் பேசினாள் ப்ரேமி.

’ப்ரேமி.. நீ என்ன பண்ணுறேன்னா? சுரேந்தர் ரூமுக்கு போக எத்தனை லேட் பண்ணனுமோ அத்தன பண்ணு. ஏற்கனவே செம்ம சரக்கு முட்ட, முட்ட குடிச்சிட்டு இருக்கான். போன் அடிச்சி கேட்டா உன் சித்தியோட பிரச்சனை பண்ணு. அவ கிட்ட போனை கொடுத்து பேசச் சொல்லு. நீ கலாட்டா பண்ணுறேன்னு. அவன் கடுப்பாவான்.

இன்னும் கொஞ்சம் ராவா சரக்க ஏத்துவான். முடிஞ்ச வரைக்கும் லேட்டாப் போய் செட்டிலாகப் பாரு. அநேகமா அவன் இருக்குற நிலைமைக்கு மட்டையாக அதிக வாய்ப்பிருக்கு.’ என்று ஸ்ரீதர் சொன்ன ஐடியா ஒர்கவுட் ஆனதாக சொன்னாள்.  உள்ளே போன மாத்திரத்தில் அவள் மேல் படுத்து மயங்கிவிட்டதாகவும். சிறிது நேரம் ரூமில் டிவி பார்த்துவிட்டு, அவனை எழுப்பி கிளம்புறேன் டைம் ஆயிருச்சுன்னு வந்துட்டேன் என்றாள்.

அவன் புரிந்தும் புரியாமலும் சரி சரி என அசட்டுத்தனமாய் சிரித்தபடி வழியனுப்பி வைத்திருக்கிறான்.  அடுத்த நாள் காலையில் தான் புரிந்திருக்க, நடக்காததை மீண்டும் நடத்த வேண்டும் என்று பிரச்சனை பண்ண ஆரம்பித்திருந்தான் சுரேந்தர். அது தான் தினம் ஷூடிட்ங் ஸ்பாட்டில் பிரச்சனை.  அவளுடய அக்ரிமெண்ட் படி அவுட்ட்டோரில் தான் எல்லாமே. இங்கே முடிந்துவிட்டால் வேறு வழியில்லை என்று தப்பித்துவிடலாம் என்று அவள் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதை பற்றிச் சொன்னாள்.

“இன்னும் ரெண்டே நாள் தான் ஷூட். அதுக்குள்ள முடிச்சிருவோம். அப்புறம் க்ளைமேக்ஸ்தான் அது சென்னைல தான் வைக்கப் போறேன் பாத்துக்கலாம்” என்று நம்பிக்கை கொடுத்தான். 

இவர்கள் பேசி கொண்டிருக்கும் அதே நேரத்தில் இருவரது போனுக்கும் செகண்ட் கால் வந்து கொண்டேயிருந்தது. இது வரை சேவ் செய்யாத நம்பர் என்பதால் இருவரும் அதைப் பற்றி கவலைப் படாமல் பேசி கொண்டிருக்க, போன் செய்த நபர் “அண்ணே.. ரெண்டு பேரும் கடலை போட்டிட்டு இருக்காங்க போல”என்று சுரேந்தரிடம் சொல்லிக் கொண்டிருந்தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நோட்டம் விட்ட அல்லக்கை.

சுரேந்தர் ஆத்திரத்துடன் ஒரு பெக் விஸ்கியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, அடுத்த பெக்கை லார்ஜாக ஊற்றிக் கொண்டார்.

“இன்னும் ரெண்டு நாளைக்குள்ள.............” என்று கருவி குடிக்க ஆரம்பித்தார். சடசடவென போன் கால்கள் பறந்தது. மேனேஜர் கூப்பிடப்பட்டார். சில விஷயங்கள் பேசப்பட்டது.

அதிகாலையில் வழக்கம் போல எழுந்து குளித்து அனைவரும் ரெடியாக இருக்க, “இன்னைக்கு ஷூட்டிங் இல்லையாம்” என்று மேனேஜர் ஸ்ரீதருக்கு போன் பண்ணி சொன்னார். “ஏன்?” என்று கேட்டதற்கு “யாருக்கு தெரியும்? சார் சொல்லச் சொன்னாரு. சொல்லிட்டேன்” என்று போனைக் கட் செய்தார்.  மொத்த யூனிட்டும் ஒன்றும் புரியாமல் கசகசவென பேசிக் கொண்டிருந்துவிட்டு, சில பேர் அவரவர் ரூமில் தூங்கவும், சில பார்ட்டிகள் ஊர் சுற்றிப் பார்கவும், இன்னும் சில பேர்  கடை திறந்ததும் சரக்கை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக ப்ளான் செய்ய, ஸ்ரீதர் தன் உதவியாளர்களுடன் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாய் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் சுரேந்தரின் போனுக்காக காத்திருந்தான்.

வின்செண்ட் வந்து “என்னவாம்?” என்றான். தெரியலை என்பது போல உதட்டை பிதுக்கினான்.  

’ப்ரேமி பஞ்சாயத்தா?” என்றான். சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தான். 

“என்ன, அதானே?.. அதான் இருக்கும் இன்னும் ரெண்டு நாள் தானே அவுட்டோர். சுரேந்தர் புலம்பிட்டேயிருக்கான். ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டேன்னு. நேத்து பூரா என்கிட்ட வந்து புலம்பல். நீ வேற அவளை அவன் கிட்டவே விட மாட்டேன்குற. உனக்கு அது நல்லதில்ல ஸ்ரீ.” என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்குள் போய் கதவை சாத்திக் கொண்டான்.

இவன் ஏதாவது சொல்லி ஏத்தி விட்டிருப்பானோ என்று கூட ஸ்ரீதருக்கு சந்தேகம் வந்தது. ராம், என்ன ஆச்சு? ஏன் ஷூட் இல்லை? ஏதாச்சும் பிரச்சனையா? என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தான்.  அவன் கேள்வியில் நம்பிக்கையில்லாத பதட்டமே இருந்தது.

மதியம் வரை சுரேந்தரிடமிருந்தோ, ப்ரடக்‌ஷன் மேனேஜரிடமிருந்தோ, கால் வரவில்லை. நடுவில் இரண்டு முறை சுரேந்தருக்க்கு போன் அடித்தான். அவன் கட் செய்து கொண்டேயிருந்தான். என்ன செய்வது என்று புரியாமல் சிகரட்டாய் குடித்து தள்ளினான்.

சுமார் ஆறு மணி வாக்கில் சுரேந்தர் அழைப்பதாய் வண்டி அனுப்பியிருந்தார்கள்.  போய் சேர்ந்த போது அதே அல்லக்கை கும்பலோடு, மேக்கப் மேனும் இருந்தான்.

‘வாங்க ஹீரோ சார்? ‘ என பிரஸ்தாபமாய் சுரேந்தர் அழைக்க, ஸ்ரீதர் புரியாமல் விழித்தான். ஏதோ ஒரு வில்லங்கம் இருப்பது மட்டும் புரிந்தது.  அசட்டுத்தனமாய் சிரித்தபடி “என்ன சார் என்னைப் போய் ஹீரோன்னுட்டு. இந்த படத்தைப் பொறுத்த வரைக்கும் நீங்க தான் ஹீரோ” என்று பில்டப் செய்தான். அது அவனை கண்ட்ரோல் செய்ய உதவுமென முடிவு செய்து. சுரேந்தர் இம்முறை அதற்கு எல்லாம் அசரவில்லை.

“ஒரே லவ்வு போல. ராத்திரி முச்சூடும் போன் ரொமான்ஸாம். ஆ.. ஆ” என்று கிண்டலடிக்க. “அது மட்டுமில்லண்ணே.. வீடியோ பாருங்க ஹீரோவும் ஹீரோயினும் கண்ணுலேயே பேசிக்கிட்டத” என்று அல்லக்கை தன் மொபைலை எடுத்துக் காட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் கண்களால்  பேசி கொண்டதை மிகத்துல்லியமாய் படமாக்கியிருந்தான்.

“டேய் சோமு. .பேசாம நீயே கேமரா மேன் ஆயிரலாம் போல. அட்டகாசமா எடுத்திருக்க. இல்ல டைரக்டர்” என்று கேட்க, ஸ்ரீதர் பதில் சொல்லாமல் இருந்தான்.

“தம்பி உனக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன். உனக்கு தெரிஞ்சிருக்கும். ஆனாலும் ரகசியம் என்னங்கடா?” என்று சுற்றில் உள்ளவர்களை பார்த்து சிரிக்க, வழக்கப்படி அவர்களும் சிரித்து முடிக்க காத்திருந்துவிட்டு, “அன்னைக்கு உண்மையில மேட்டரே நடக்கலை மட்டையாயிட்டேன்.

என்னாடி அதான் ஒன்னுமே நடக்கலை இல்லை வாடின்னா.. அதெல்லாம் முடியாது. ஒரு வாட்டித்தான்னு ஒத்துக்கிட்டேன் அது இதுன்னு சொல்லிட்டேயிருந்தா. டைரக்டர் திட்டுவாரு. அதப் பண்ணுவாருன்னு பில்டப் கொடுத்திட்டேயிருந்தா. நீ என்னடான்னா இத்தனை நாள் இல்லாம ரெண்டு நாளா தீயா வேலை செய்யுற?

இன்னும் ரெண்டு நாள் தான் ஷூட் அடிச்சு ஓட்டிட்டா அவளும் எஸ்கேப்பாயிடலாம்னு பார்க்குறாளா? நான் ஷூட் நடத்தினாத்தானே முடியும? மைராப் போச்சு அதான் நிறுத்திட்டேன். எனனங்குறே? நேத்து நைட் பூரா பேசினப்ப ஏதும் சொல்லலையா?”

“சார் நீங்க நினைக்கிறாப்புல ஏதுமில்லை சார். ரெண்டு நாள் ஷூட்ல எடுக்க வேண்டியதைப் பத்தித்தான் பேசிட்டிருந்தோம்”

“அப்ப தெனம் அப்படித்தான் பேசினியா?”

“அட ஆமா சார். ரெண்டு நாளா அவ ஷூட்டுல ஒழுங்கா கோவாப்பரேட் பண்ணலை.”

“அட எனக்கு கூட பண்ணலைனுதானே பஞ்சாயத்தே” என்று இடைச்சொருகலாய்  சொல்ல மீண்டும் அதே அல்லக்கை சிரிப்புகள் மேலோங்க.. “ஆனா இன்னைக்கு முடிக்கிறேன். பாப்பா வந்திட்டேயிருக்கு.” என்று உற்சாகமாய் சொல்ல. சுற்றில் இருக்கிறவர்ள் மீண்டும் ஆபாசமாய் சிரித்தார்கள்.

“இருந்து பார்த்துட்டுப் போறியா?” என்று  கேட்ட சுரேந்தரை என்ன செய்ய என்பது போல பார்த்தான் ஸ்ரீதர்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 40 - https://bit.ly/2CIThDX

பகுதி 39 - https://bit.ly/2VZWRT3

பகுதி 38 - https://bit.ly/2RMISAK

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close