[X] Close

காஷ்மீர் குறித்து ஷாகித் கருத்து!- ராஜ்நாத் சிங் வரவேற்பு


shahid-afridi-is-right-rajnath-singh

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Nov, 2018 14:44 pm
  • அ+ அ-

காஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி  லண்டனில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், "பாகிஸ்தானில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதனால்  நான்கு மாகாணங்களைக் கூட கையாள முடியவில்லை. 
காஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம். அதற்காக இந்தியாவுக்கும் கொடுக்க வேண்டாம்.  காஷ்மீரை இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ கட்டுப்படுத்தக் கூடாது. மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும். அங்கு அன்றாடம் மனித உயிர்கள் போவது வருத்தமாக இருக்கிறது" எனக் கூறி இருந்தார்.

காஷ்மீர் மாநிலம் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறிய கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார். 
 சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங்,, "காஷ்மீர் குறித்து  ஷாகித் அஃப்ரிடி கூறுவது சரிதான்.  சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு, காஷ்மீரை எப்படி சமாளிக்கும்? காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காஷ்மீரை இந்தியாவுக்கும் கொடுக்கக்கூடாது என ஷாகித் சொல்லியிருந்ததை விட்டுவிட்டு முதல் பாதியை மட்டுமே வைத்து ஷாகித்தை வரவேற்றிருக்கக் கூடாது எனக் கூறியிருப்பதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close