[X] Close

ரஜினி மிகச் சிறந்த நடிகர் மட்டுமே அரசியல்வாதி அல்ல!- முத்தரசன்


mutharasan-slams-rajini

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Nov, 2018 13:42 pm
  • அ+ அ-

ரஜினி ஒரு நல்ல நடிகர் மட்டுமே அவர் அரசியல்வாதி அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்தியில் ஆளும் கட்சி ஒரு வகுப்புவாத கட்சி. ஒரு தீய சக்தி. இந்த நாட்டுக்கே பேரபாயமான கட்சி.  ஊடகங்களுக்கு எதிராக செயல்படும் கட்சி. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் கட்சி. மனு தர்மத்தை அமல்படுத்த துடிக்கும் கட்சி. ஆகவே, அந்தக் கட்சி அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் ஒன்று சேர்வதுதான் சரி.
இதில் ரஜினிகாந்த் கட்சியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ரஜினி காலையில் ஒன்று சொல்வார் மாலையில் ஒன்று சொல்வார். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். அவர் ஒன்றும் அரசியல்வாதி இல்லை" எனக் கூறினார்.

முன்னதாக, ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒருவரை 10 பேர் சேர்ந்து எதிர்த்தால் அந்த ஒருவர் பலசாலிதானே என்று மோடி குறித்து பேசியிருந்தார்.

இது தொடர்பாகவே முத்தரசன் தனது கருத்தை இன்று பதிவு செய்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close