[X] Close

ரஜினி பதிலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்: அமைச்சர் ஜெயக்குமார்


jayakumar-s-reaction-to-rajinikanth

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Nov, 2018 12:55 pm
  • அ+ அ-

7 பேர் விவகாரம் குறித்து ரஜினி தெரியாது என அளித்த பதிலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நேற்று 7 பேர் பற்றித் தெரியாது எனக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் விளக்க பிரஸ் மீட் நடத்தினார்.

அப்போது, "7 பேர் யாரென்று தெரியாத முட்டாள் இல்லை நான். பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவருடன் 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினேன்.  25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துவரும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஒருவரை எதிர்த்து பத்து பேர் கூட்டு சேர்ந்தால் அந்த ஒருவர் தானே பலசாலி. நான் இன்னும் முழுசா அரசியலுக்கு வரவில்லை. பாஜக ஆபத்தான கட்சி என்பது எதிர்க்கட்சிகள் கருத்து. என் கருத்து, மக்கள் முடிவு செய்யட்டும்" என்று பேசினார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரையும் விமர்சித்தார். இதே கேள்வியை நான் அவரிடம் கேட்டால் என்னவாகும்? சிலர் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் பேச வேண்டும் என்று ரஜினி கூறினார்.

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு ரஜினியின் இந்த எதிர்வினையை ஒட்டி கருத்து சொன்ன அமைச்சர் ஜெயக்குமார், "நடிகர்களுக்கு குளிர்விட்டு போச்சு என்று கூறியது தரம் தாழ்ந்த கருத்து கிடையாது . ஜெயலலிதா இருந்தபோதும், தற்போதும் கருத்துக்களை மாறி கூறுபவர்களுக்கு தான், நான் கூறியது பொருந்தும்.

பாஜக ஆபத்தான கட்சியா என்று கேட்டால் எந்தக் கட்சி எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.  தமிழக உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், மாநில வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கம் காட்டுவோம். 7 பேர் விவகாரம் குறித்து ரஜினி தெரியாது என அளித்த பதிலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்" என பதில் அளித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close