[X] Close

எந்த 7 பேரு? இப்பத்தான் கேள்விப்பட்டேன்!- அதிர வைக்கும் ரஜினியின் பதில்


rajini-interview

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Nov, 2018 16:18 pm
  • அ+ அ-

7 பேர் விடுதலை குறித்து இப்பத்தான் கேள்விப்பட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இன்று அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவரிடம் நிருபர்  ஒருவர் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு கோரிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசே முடிவு செய்துள்ளது. இதில் உங்கள் நிலைப்பாடு என்னவென்று கேட்க.. "எந்த ஏழு பேர்?" ராஜீவ் கொலையாளிகள்.. "எனக்குத் தெரியவில்லை. இப்பதான் வந்துகிட்டு இருக்கிறேன். இல்ல இப்பத்தாங்க கேட்கிறேன்" என்றார்.

அதனைத் தொடர்ந்து தருமபுரி சிறுமி பாலியன் பலாத்காரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்" என்றார். மீண்டும், ஏழு பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட "அதைப் பத்தி இப்பதான் கேள்விப்பட்டேன்னு சொன்னேன்" என்றார். பணமதிப்பு நீக்கம் தொடர்பான கேள்விக்கு, "அது சரியாக அமல்படுத்தப்படவில்லை" என்றார்.

பாஜகவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி நடக்கிறதே, பாஜக அவ்வளவு ஆபத்தான கட்சியா என பெண் நிருபர் ஒருவர் விணவ, "அப்படித்தான் இவர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்ப அப்படித்தானே இருக்க வேண்டும்" எனக் கூறிச் சென்றார்.

ரஜினியின் இந்த பதிலைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close