[X] Close

விஜயின் சர்கார் தீவிரவாதத்தை தூண்டுகிறது: சி.வி. சண்முகம் விமர்சனம்


sarkar-movie-an-attempt-is-made-to-instigate-violence-in-society-says-law-minister-shanmugam

  • இந்து குணசேகர்
  • Posted: 08 Nov, 2018 12:42 pm
  • அ+ அ-

விஜய் நடித்துள்ள சர்கார் திரைபடம் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும், விஜய் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரித்துள்ளார்.

சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி  ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி, கேலியாக விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு உட்பட  பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டத் துறை அமைச்சர் சண்முகம்,  சர்கார் திரைப்படத்தையும்,  நடிகர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி. சண்முகம் கூறும்போது,

”இந்தப் படத்தின் மூலம் சமூகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தீவிரவாதிகள் பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுவது உள்ளது.  ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கீழிறக்கும் வகையில் இந்தப் படத்தின் கதையும் காட்சிகளும் இருக்கின்றன. நடிகர் விஜய் மீதும் சர்கார் திரைப்பட குழு மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க மூத்த வழக்கறிஞர்களுடன் சண்முகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close