[X] Close

பிரதமர் எங்கே? அமித் ஷா எங்கே?- அட கொண்டாட்டம்தான் எங்கே?- குஷ்பு கலாய்ப்பு


i-was-looking-for-the-pm-narendramodi-amitshah-n-the-bandwagon-of-bjp-celebrating-their-idea-of-demonetisation

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 11:32 am
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாஜக ஏன் இதை மார்தட்டி கொண்டாடவில்லை என குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2016 நவம்பர் 8 இரவு பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட தொலைக்காட்சி அறிவிப்பு கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களைப் பீதிக்குள்ளாக்கியது. 

இன்று நவம்பர் 8 2018 உடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பண மதிப்பு நீக்கம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டரில், "பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவின் தொண்டர்கள் எல்லோரும் இணைந்து ஆட்டம் பாட்டம் என பணமதிப்பு நீக்கத்தை கொண்டாடுவார்கள் என்று நினைத்தால் இங்கு அமைதியல்லவா நிலவுகிறது.

இது ஒன்றே போது பாஜகவுக்கே தாங்கள் தேசத்தை சூறையாடி அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைத்துவிட்டோம் என்பது தெரிந்திருக்கிறது என்பதை உணர்த்த.

இன்றுதான் பிரதமர் தன் சினத்தை மக்கள் மீது கடத்தினார். இந்த நாள் இந்திய வரலாற்றின் கறுப்பு தினமாகும். பிரதமரைத் தவிர பிரபல பொருளாதார நிபுணர்கள் பலரும் இதில் ஒத்துப் போகிறார்கள். ஒரு பேரிடர் நடந்து முடிந்த பின்னரும்கூட பிரதமர் அதை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கிறார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close