[X] Close

ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி என்று யார் சொன்னது?- டிடிவி தினகரன்


ammas-real-name-is-not-komalavalli

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 10:44 am
  • அ+ அ-

கோமளவள்ளி என்பது அம்மாவின் இயற்பெயரே இல்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

சர்க்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்துக்கு கோமளவள்ளி என்று பெயர் வைத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.அன்பழகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய டிடிவி தினகரன், "கோமளவல்லி என்பது அம்மாவின் இயற்பெயரே இல்லை. 2002- 2003-ல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அம்மாவை அந்தப் பெயர் சொல்லி விமர்சித்தபோது அம்மாவே என்னிடம் கேட்டார். என்னப்பா கோமளவள்ளி என்று சொல்கிறார்கள். நான் அந்தப் பெயரில் எந்த திரைப்படத்திலும் நடித்ததாகத் தெரியவில்லையே என்றார்" எனக்கூறினார்.

சர்கார் சர்ச்சைகளுக்கு இடையே, ஜெயலலிதாவின் இயற்பெயர் சர்ச்சை புதிதாக உருவெடுத்துள்ளது. அமைச்சர்கள் எல்லோரும் தவறான புரிதலில் இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close