[X] Close

20 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இடையே கடும் போட்டி


eps-vs-ops

  • kamadenu
  • Posted: 06 Nov, 2018 09:28 am
  • அ+ அ-

தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் ஓபிஎஸ் - பழனிசாமி தரப்பினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் பிளவுபட்டிருந்த முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இணைந்தன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் கே.பழனிசாமியும் உள்ளனர்.அணிகள் இணைந்தாலும் இருதரப்பிலும் பல கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

‘நாங்கள் இரட்டைக்குழல் துப்பாக்கி. எங்களை யாராலும் பிரிக்க முடியாது’ என ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இருவர் ஆதரவு நிர்வாகிகள் மத்தியில் இன்னும் புகைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது.சமீபத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன், கட்சியின் நிலை குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவருக்கு கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் சமாதானமாகிவிட்டார்.இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த 20 தொகுதிகளுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல்நிலவுகிறது. தேர்தல் பணிகளைஅரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.அதிமுகவை பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தல் முக்கிய மானதாக உள்ளது. குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலைநிலவுகிறது.

சமீபத்தில் நடந்த அதிமுக தொகுதிப் பொறுப்பாளர் கள் கூட்டத்திலும் இதுபற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்அனைவருக்கும் பரிட்சயமான வராக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், வேட்பாளர்கள் தேர்வில் இப்போதே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் - பழனிசாமி ஆதரவாளர்கள் வாய்ப்பு கேட்டு நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் சீட் பெற இரு தரப்பினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பெரியகுளம், ஆண்டிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளிலும் இதேபோன்ற சிக்கல் உருவாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வில் சிக்கல் இருப்பதாக தலைமைக்கு தகவல் வந்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் சிக்கல்ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் அமர்ந்து பேசி, இதற்கு தீர்வு காண வேண்டும். தேர்தலில் யார் ஆதரவாளர் என்பதைவிட, யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து வேட்பாளரை நிறுத்த வேண்டும். 20 தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 20 முதல் 30 வாக்காளருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகள் நடந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தலைமையின் கடமையாகும்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close