[X] Close

ஹாட்லீக்ஸ் : இளவரசி... பரோல்... ஏன்?


hot-leaks-ilavarasi

இளவரசி - சசிகலா

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 09:23 am
  • அ+ அ-

சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசி, தனது சகோதரருக்கு உடல் நிலை சரியில்லை என்று சொல்லி பரோலில் வந்திருக்கிறார். 

ஆனால், உண்மையான காரணம் வேறு என்கிறார்கள். 

நீரிழிவு நோயால் அவதிப்படும் இளவரசி, சிறையில் தினமும் இரண்டு வேளை இன்சுலின் எடுத்துக் கொள்கிறார். 

அப்படியும் சர்க்கரை கட்டுக்குள் வரவில்லை. 

இந்த நிலையில், சமீபத்தில் அவரது காது பகுதியில் கட்டி உண்டாகி பெரும் அவஸ்தையைக் கொடுத்திருக்கிறது. 

அதற்குச் சிகிச்சை எடுக்கவே பரோலில் வந்ததாகச் சொல்கிறார்கள். 

அதுவுமில்லாமல், பேரக் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் அவருக்குள் இருந்ததாம். அதனால் தீபாவளியை ஒட்டி பரோல் விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கிறார் இளவரசி.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close