[X] Close

ஹாட்லீக்ஸ் : அடுத்த சிஎம் நான்தான்!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 09:30 am
  • அ+ அ-

ஆட்சி கலைந்துவிடுமோ என அதிமுக அமைச்சர்களில் பெருவாரியானவர்கள் கதிகலங்கிக் கிடக்கிறார்கள். 

ஆனால், எப்போதும் பக்திப் பழமாய் வலம் வரும் அந்த அமைச்சரோ, “சீக்கிரமே ஆட்சி கலையுது... அடுத்த சிஎம் நான்தான். இதை நான் சொல்லல  என்னோட ஜாதக கட்டம்  சொல்லுது” என்று தனக்கு  நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம். 

அவசரத்துக்குத் தேவைப்படும் என்பதால் தனது ஜாதகத்தின் நகலை செல்போனில் ஏற்றிவைத்திருக்கிறாராம் அந்த அமைச்சர். 

இவரோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு அமைச்சர் இதையெல்லாம் கேள்விப்பட்டு, “சரியான காமெடி பீஸுய்யா... அந்தாள மொதல்ல நல்ல ஆஸ்பத்திரியா பார்த்து அட்மிட் பண்ணுங்கப்பா...” என்று சொல்லிச் சிரித்தாராம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close