[X] Close

சபரிமலையில் பண்பாடு தான் முக்கியம்; பெண்பாடு முக்கியமில்லை: தமிழிசை கருத்து


tamilisai-in-sabarimalai-protest

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Oct, 2018 10:15 am
  • அ+ அ-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பண்பாடு தான் முக்கியம்; பெண்பாடு முக்கியமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும்கூட அங்கு பெண்கள் செல்ல முடியாத அளவுக்கு ஐயப்ப பக்தர்களும், பாஜக, ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா, மற்றும் பெண்ணியவாதி ரஹேனா ஆகியோர் சபரிமலை நோக்கிச் சென்றனர். அவர்கள் நிலப்பந்தல் அடைந்தபோது பக்தர்கள் சூழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பக்தர்களுடன் இணைந்து சபரிமலை அர்ச்சகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், சபரிமலைக்குள் பெண்கள் நுழைய முயன்றால் நடையை சாத்துமாறு தந்திரிக்கு பந்தலம் அரசு குடும்பம் உத்தரவிட்டுள்ளது. தேவசம் அமைச்சரும் போராட்டங்களை நடத்த சபரிமலை இடமல்ல எனக் கூறியிருந்தார். தற்போது இரண்டு பெண்களையும் பம்பை நோக்கி திருப்பி அழைத்துச் செல்லும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்து தமிழிசை சவுந்தரராஜன், "ஐயப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டுவரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு பெண்பாடு முக்கியமில்லை. பழக்கப்பட்டுவரும் பண்பாடு தான் முக்கியம். இது மூடநம்பிக்கையல்ல... முடிவான நம்பிக்கை.. இது தீர்க்கக்கூடிய நம்பிக்கையல்ல.. தீர்க்கமான தீவிரமான நம்பிக்கை" எனத் தெரிவித்திருக்கிறார்.

மற்றுமொரு ட்வீட்டில், "சபரிமலை வழிப்பாட்டுத் தலம். நம்பிக்கை கொண்டவர்களுக்கான தலம். இது நம்பிக்கையற்றவர்களுக்கும் சமூக போராளிகளுக்குமான இடம் அல்ல. ஆண்டாண்டு காலமாக நிலவும் நம்பிக்கையை சமூக போராளிகள் சிதைக்கக் கூடாது. அதுதவிர மற்ற மதித்தின் அடிப்படைவாதிகளும் செல்வதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவது கண்டிக்கத்தக்கது" எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close