[X] Close

எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்!- ஸ்டாலின் தாக்கு


stalin-slams-edapadi-palanisamy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Oct, 2018 10:36 am
  • அ+ அ-

கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் தான் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கடந்த 2016-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. 2018 ஜூன் மாதம் பாலம் திறக்கப்பட்டது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. தரமான பொருட்களைப் பயன்படுத்தி முறையான கட்டுமானம் மேற்கொள்ளப்படாததே விரிசலுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது!
கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close