[X] Close

திமுகவில் டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிக்கப்பட்டது ஏன்? - பரபரப்பு பின்னணித் தகவல்கள்


tks-elangovan-dismissed-from-dmk

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 10:23 am
  • அ+ அ-

சென்னை

திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி யாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று முன்தினம் இரவு வெளி யிட்ட அறிக்கையில், ''திமுக செய்தித் தொடர்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படு கிறார்'' என தெரிவித்துள்ளார்.

கருணாநிதி, கனிமொழிக்கு நெருக்கமாக இருந்த மூத்த தலை வரான டி.கே.எஸ்.இளங்கோவ னின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி மறைந்த 100-வது நாளான வரும் நவம்பர் 15-ம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்படவுள்ளது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா அல்லது முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங்கை அழைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

இதற்கான அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகாத நிலையில், சிலை திறப்பு, சோனியா காந்தி பங்கேற்பது குறித்து நேற்று முன்தினம் இளங்கோவன் பேட்டி அளித்தார். இதனால் கோபம டைந்த ஸ்டாலின் அவரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்க உத்தர விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் பலரிடம் பேசியபோது, ''கருணா நிதி சிலை திறப்பு விழா பற்றி முன்கூட்டியே கூறியதால் மட் டும் அவரது கட்சிப் பதவி பறிக் கப்படவில்லை. கருணாநிதி இருக் கும்போதே கடந்த 2015 செப்டம்பரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசிய தற்காக கருணாநிதியின கடும் கோபத்துக்கு ஆளானவர் இளங் கோவன்.

அப்போது, மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் கருணாநிதி அவரை மன்னித்து ஏற்றுக் கொண் டார். அதன்பிறகு அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு மு.க.அழகிரியை ஆதரித்தோ, எதிர்த்தோ யாரும் பேசக் கூடாது என ஸ்டாலின் கண்டிப்புடன் கூறி யிருந்தார். ஆனாலும், தொலைக் காட்சி விவாதம் ஒன்றிலும், எஃப். எம். வானொலியிலும் அழகிரி பற்றி இளங்கோவன் பேசினார். இதற்காக அவரை அழைத்து ஸ்டாலின் கண்டித்துள்ளார். அதன்பிறகும் கருணாநிதி சிலை திறப்பு பற்றி பேசியதால் கோபமடைந்த ஸ்டாலின் கட்சிப் பதவியை பறித்துள்ளார் என்றனர்.

இளங்கோவனின் பின்னணி

தொடக்கத்தில் அதிமுகவில் இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் வைகோ மதிமுகவை தொடங்கிய தும் அதில் இணைந்தார். பின்னர் திமுகவில் சேர்ந்த அவர், குறுகிய காலத்திலேயே கருணாநிதி, கனி மொழியின் நன்மதிப்பை பெற்றார்.

2009 தேர்தலில் வட சென்னை தொகுதியில் வென்று மக்களவை உறுப்பினரானார். 2014 தேர்தலில் ஸ்டாலின் அவரை தென் சென்னையில் நிறுத்தினார். இத்தேர்தலில் அவர் தோல்வி அடையவே மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

கட்சியில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆள் ஆளுக்கு கருத்துச் சொல்வதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் திமுக சார்பில் ஊடகங்களில் விவாதகங்கள் தவிர்த்த நேர்காணலில் பங்கேற் போர் பட்டியலில் டி.கே.எஸ்.இளங் கோவன் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஊடகங்களில் தன்னிச்சையாகக் கருத்து தெரிவித்தார் என்பதற்காக மூத்த தலைவர் ஒருவரின் கட்சிப் பதவியை பறித்ததன் மூலம், கட்சியை வழிநடத்துவதில் ஜெய லலிதாவின் பாணியை தி.மு.க-வும் பின்பற்றத் தொடங்கிவிட்டதா என்ற விவாதங்களும் இதன் மூலம் எழுந்துள்ளது.கட்சியில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஆள் ஆளுக்கு கருத்துச் சொல்வதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close