[X] Close

ஹாட்லீக்ஸ் : சீண்டிவிட்டுட்டீங்களே சீமான்..!


hot-leaks-seeman

சீமான்

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 10:22 am
  • அ+ அ-

அழகுமுத்துக்கோன் விழாவில் சீமான் கொளுத்திப் போட்ட நெருப்பு அவருக்கு எதிராகப் புகைய ஆரம்பித்திருக்கிறது. 

 சங்கரன்கோவிலில் நடந்த அழகுமுத்துக்கோன் விழாவில் பேசிய சீமான், “வடக்கே இருப்பவர்கள்தான் யாதவர் என்று போட்டுக் கொள்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் யாதவர் என்று சொல்லிக்கொண்டு வடக்கே போய் எந்தக் காரியமும் சாதிக்க முடியாது.

 ஆகவே, நீங்கள் யாதவர் என்று சொல்லாதீர்கள் கோனார் என்றே சொல்லுங்கள்” என்று முழங்கினார். 

இப்போது இந்தப் பேச்சுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் யாதவர் கூட்டமைப்பினர், “ஆயர், இடையர், கோனார் என 56 வகை பிரிவுகளைக் கொண்ட நாங்கள் யாதவர் என்ற ஒரே தலைப்பின் கீழ் இணைந்திருக்கிறோம். 

இது தெரியாமல் எங்களுக்குள் குழப்பத்தை உண்டாக்க நினைக்கும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தஞ்சை எஸ்பி-யிடமும் திருச்சி போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close