[X] Close

சசிகலாவை மனதில் வைத்துத்தான் செல்லூர் ராஜூ சொல்லியிருக்கிறார்: டிடிவி தினகரன்


ttv-about-sellur

  • kamadenu
  • Posted: 16 Oct, 2018 11:17 am
  • அ+ அ-

மதுரையில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, "வரும் காலத்தில் உங்களில் ஒருவர் அதிமுகவை தலைமை ஏற்று நடத்தக்கூடிய காலம் வரும்" எனப் பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்பேச்சு விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் “மகளிர் நிர்வாகிகளை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தில் ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது. இன்னும் உழைக்கணும், இன்னும் நல்ல பணிபுரிய வேண்டும் என்ற வேகத்தை உருவாக்க வேண்டுமென்றே கூறினேன். உள்ளாட்சித் தேர்தலில் 50% விழுக்காடு பெண்கள் போட்டியிட அம்மா வாய்ப்பு வழங்கியிருக்கிறார். கட்சியிலும் சில சதவீதங்கள் ஒதுக்கியுள்ளார். பெண்கள் சாதிக்கின்ற காலம் வரும் போது, ஒரு காலத்தில் இயக்கத்தை வழிநடத்த வேண்டிய காலம் வரலாம் என்று தெரிவித்தேன். முதலமைச்சர் என்று யார் சொன்னது?” என்று விளக்கமளித்தார். மேலும், சில அமைச்சர்களும் செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சுக் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனிடம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு டிடிவி தினகரன் கூறியதாவது:

மற்றவர்களை விட செல்லூர் ராஜுவுக்கு கொஞ்சம் நன்றி உணர்வு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. சசிகலாவை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு மற்றவர்கள் வந்துவிட்டார்கள். அவர் ஒருவர்தான் இன்னும் சின்னம்மா என்று மரியாதையுடன் அழைக்கிறார். சசிகலாவை மனதில் வைத்துத்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததும் மாற்றி பேசுகிறார்

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close