[X] Close

மாமியார், மருமகள் சண்டையைப் போக்கியவர் ஜெ.: செல்லூர் ராஜூ


sellur-raju-comedy-speech-at-madurai

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 17:35 pm
  • அ+ அ-

இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டத்தின் மூலம் மாமியார், மருமகள் சண்டையைப் போக்கியவர் ஜெயலலிதா என்று மதுரையில் செல்லூர் ராஜூ பேசினார்.

அதிமுக அமைச்சர்களில் செல்லூர் ராஜூ எப்போதுமே காமெடியாக அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களை எதார்த்தமாக பேசிவிடுவார். சமீபத்தில் கூட “விரைவில் அதிமுகவுக்கு ஒரு பெண் தலைமை தாங்கக்கூடிய சூழல் வரும்” என்று பேசி சர்ச்சையில் சிக்கினார்.  அதே போல, இப்போது காமெடியாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

தொட்டில் குழந்தை திட்டத்திலிருந்து இப்போது இருக்கிற மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் வரை என அதிமுக கொண்டு வந்த திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை குடும்பத்தில் எத்தனை பிரச்சினையை போக்கி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.

இலவச கிரைண்டர், மிக்ஸி திட்டம் மாமியார், மருமகள் சண்டையே போக்கியிருச்சு தெரியுமா... முதலில் இட்லிக்கு மாவு நான் ஆட்டணுமா, ஏன் நீ ஆட்டக்கூடாதா சும்மா குத்துக்கல் மாதிரித்தானே உட்கார்ந்திருக்க என்ற பிரச்சினை எல்லாம் வரும். அப்பிரச்சினையை தீர்த்து வைத்தவர் என் தாய் அல்லவா. அவருக்கென்று திருமணம் நடந்ததா, குடும்பம் இருந்துச்சா.. இல்லை. ஆனால், மக்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணமிருந்தது.

இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close