[X] Close

முதல்வர் பதவி விலக தேவை இல்லை: அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கருத்து 


rb-udayakumar-speech-about-chief-minister

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 11:01 am
  • அ+ அ-

மதுரை திருநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளி களுக்கு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுக்கு அவர் பதவி விலகத் தேவை இல்லை. எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு அவரை களங்கப்படுத்துகின்றனர்.

கமல் சொல்வது போன்று, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை. குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.15 லட்சம் கோடியில் தமிழக அரசு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அவர் ஆதாரம் இன்றி குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்கிறார். டிடிவி. தினகரனை எங்களுடன் இணைக்கும் அளவுக்கு அதிமுகவில் தொய்வு எதுவுமில்லை.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close