[X] Close

தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்துவதன் மூலமே தமிழகம் காப்பாற்றப்படும்: திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கருத்து


manik-sarkar-speech

திருப்பூரில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் | படம்: இரா.கார்த்திகேயன்

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 10:25 am
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்துவதன் மூலமே தமிழகம் காப்பாற்றப்படும் என திருப்பூரில் மாணிக் சர்க்கார் பேசினார்.

திருப்பூர் ராயபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசியதாவது:

டெல்லியில் சுர்ஜித் பவன் கட்டப் பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மார்க்சிய கல்விக்கூடமாக திகழ உள்ள அந்த இடம், இன்னும் சில மாதங்களில் திறக்கப்படும். நவம் பர் புரட்சியின் 101-ம் ஆண்டு விழாவை வரும் 7-ம் தேதி கொண் டாட உள்ளோம். ரஷ்யாவில் நடந்த சோசலிச ஆட்சியில் அனைவருக் கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டது. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, சுகாதாரம் முழுமையாக வழங்கப் பட்டது. சுரண்டும் வர்க்கத்தை தனி மைப்படுத்துவது, சுரண்டும் ஆட்சி யாளர்களை அகற்றுவது தான் சோசலிசத்தின் கட்டமைப்பு. நாம் அதை நோக்கி பயணிக்கிறோம்.

நம்நாடு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ரூபாயின் மதிப்பு படு மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியா வசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்கிறது. இது அனைத்துத் தரப்பிலும் இன்றைக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் மக்களின் துயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சிறு மற்றும் நடுத்தர விவசாயி களுக்கு மத்திய, மாநில அரசு கள் எவ்வித உதவியும் செய்ய வில்லை. கடந்த நான்கரை ஆண்டு பாஜக ஆட்சியில், விவசாயிகளின் தற்கொலை 40 சதவீதம் அதிகரித் துள்ளது. ஆளும் மத்திய அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் மிகப்பெரிய போராட் டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இதனை முறியடிக்க மக்களை பிளவுபடுத்த ஆர்.எஸ்.எஸூம், பாஜகவும் முயல்கிறது. நாட்டின் மகத்துவமான மதச்சார் பின்மையை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்காவின் இளையதம்பி யாக மோடி அரசு உள்ளது.

பலமாநிலங்களில் மோசடியாக பாஜக ஆட்சி நடத்துகிறது. தமிழகத் திலும் பாஜகவே மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது. மாநில அரசுக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இன்றைக்கு மாநில அரசை, மத்தியில் இருப்பவர்கள் மிரட்டுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் மத்தி யில் பாஜக அல்லாத மதச்சார்பற்ற அரசை நிறுவ நாம் முயல வேண்டும். நாடாளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர்களின் எண்ணிக் கையை அதிகரிக்கச் செய்வது, பாஜகவுக்கு எதிரான வாக்குகளை, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய சக்தியாக மாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் கூட்டாளியான அதிமுகவையும், பாஜகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதன் மூலமே, தமிழகம் காப்பாற்றப்படும் என்றார்.

முன்னதாக, பொதுக்கூட்டத்தை ஒட்டி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்து செந்தொண்டர் பேரணி நடந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close