[X] Close

பெண் முதலமைச்சர் என்று யார் சொன்னது? - அதிமுக-வுக்கு பெண் தலைமை பேச்சுக்கு செல்லூர் ராஜூ விளக்கம்


sellur-raju-explains-why-he-speaks-about-admk-heads

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 08:55 am
  • அ+ அ-

விரைவில் அதிமுக-வுக்கு பெண் தலைமை பேச்சுக்கு மதுரையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, "வரும் காலத்தில் உங்களில் ஒருவர் அதிமுகவை தலைமை ஏற்று நடத்தக்கூடிய காலம் வரும்" எனப் பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மதுரையில் செல்லூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு அவர் பதிலளித்ததாவது:

வாக்குச்சாவடிக்கு 5 பேர் வீதம் பெண்கள் எடுக்கப்பட்டு, அவர்கள் இருசக்கர வாகனத்தில் வாக்காளர்களை சந்திக்கப் போகிறார்கள். தேர்தல் வரும் பொழுது இப்படி போட்டிப் போட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், ஒரு காலத்தில் வாய்ப்பு வரும் என்று சொன்னேன். இதில் என்ன தவறு?

மகளிர் நிர்வாகிகளை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தில் ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது. இன்னும் உழைக்கணும், இன்னும் நல்ல பணிபுரிய வேண்டும் என்ற வேகத்தை உருவாக்க வேண்டுமென்றே கூறினேன். 

உள்ளாட்சித் தேர்தலில் 50% விழுக்காடு பெண்கள் போட்டியிட அம்மா வாய்ப்பு வழங்கியிருக்கிறார். கட்சியிலும் சில சதவீதங்கள் ஒதுக்கியுள்ளார். பெண்கள் சாதிக்கின்ற காலம் வரும் போது, ஒரு காலத்தில் இயக்கத்தை வழிநடத்த வேண்டிய காலம் வரலாம் என்று தெரிவித்தேன். முதலமைச்சர் என்று யார் சொன்னது?

இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close