[X] Close

முதல்வர் பதவி விலகி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் கருத்து


thirumavalavan-speech-at-madurai-airport

  • kamadenu
  • Posted: 14 Oct, 2018 11:30 am
  • அ+ அ-

தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை நடைபெற இருப் பதால், அவராக முன்வந்து பதவி விலகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறிய தாவது:

நக்கீரன் கோபால் மீதான வழக்கு விவகாரத்தால் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் தலை குனிவு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றிய உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் அறிக்கை அவர்களின் நேரத்தைத்தான் வீணடிக்கும்.

நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் ரகசியமாக இருக்கும்போது, அது பற்றிய தகவல் ஆளுநர் மாளிகைக்கு எப்படி தெரிந்தது? இது அதிகார வரம்பை மீறிய செயல்பாடு என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. இந்நிலையில், தற்போது ஆளுநர் மாளிகை மீது அவதூறு பரப்பினால் நட வடிக்கை எடுப்போம் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சரியானது அல்ல.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி மீதான முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற இருப்பதால், அவராக முன்வந்து பதவி விலகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தல் தேதி தள்ளி வைத்ததற்கு அரசியல் ரீதியாக உள்நோக்கம் உள்ளது என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close