[X] Close

‘அதிமுக அரசின் ரிமோட் பிரதமர் மோடியிடம் உள்ளது’


admk-government-remote-in-modi-hand

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 09:47 am
  • அ+ அ-

அதிமுக அரசின் ரிமோட் மோடியிடம் உள்ளது என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறியது:

ரபேல் போர் விமான ஊழல் குறித்து மோடியோ, அவரது அமைச்சரவையினரோ பதிலளிக்காமல் வேறு பிரச்சினைகளை குறித்தே பேசுகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதிக வரி விதித்துவிட்டு வெறும் ரூ.2.50 குறைக்கின்றனர்.

பாஜக, அதிமுக அரசுகளுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டுள்ளது. அதிமுக அரசின் ரிமோட் பிரதமர் மோடியிடம் உள்ளது. நாட்டின் அதிகாரம் மோடி மற்றும் அமித்ஷாவிடம் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கின்றனர். பெட்ரோல், டீசல், காஸ் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விலைவாசி உச்சத்தில் உள்ளது. இடைத்தேர்தல்களில் பாஜக, அதிமுகவுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். இடைத்தேர்தலை கண்டு பயந்தே அதிமுக தேர்தலை தள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close