[X] Close

ஹாட்லீக்ஸ் : ‘பஞ்ச்’, 'பளார்’ பாலகிருஷ்ணா!


hot-leaks-balakrishna

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Oct, 2018 10:09 am
  • அ+ அ-

என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா எம்எல்ஏ, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சம்பந்தியும் ஆவார். 

தனது மகளைத்தான் நாயுடுவின் மகனும் ஐடி துறை அமைச்சருமான லோகேஷுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார்.

 படங்களில் மட்டுமல்ல... யதார்த்தத்திலும் ‘பஞ்ச்’ டயலாக் பேசுவதிலும் மற்றவர்களுக்குப் ‘பஞ்ச்’ கொடுப்பதிலும் பாலகிருஷ்ணா கைதேர்ந்தவர்.

 கடந்தவாரம் தெலங்கானாவில் கம்மம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றார். 

அந்த இரவு நேரத்திலும் அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் சிலர் அவரோடு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். 

அதில் நான்கு பேர் கொஞ்சம் ஓவராகவே அவரது வேனுக்கு எதிரே நின்று ஆட்டம் காட்டினார்கள்.

 ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த பாலகிருஷ்ணா, வேனை விட்டு இறங்கி வந்து நான்கு பேருக்கும் பொளேர் பொளேர் என கன்னத்தில் விட்டார். இதை சற்றும் எதிர்பாராத அந்த ரசிகர்கள் சற்றே நிலைகுலைந்து போனார்கள். 

அத்தோடு கூட்டம் கலைந்தாலும் பாலகிருஷ்ணா அங்கிருந்து நகர்ந்த பிறகு, அவருக்காக வைக்கப்பட்டிருந்த ஃபிளெக்ஸ் போர்டுகளையும் போஸ்டர் களையும் கிழித்து தீயிட்டுக் கொளுத்தி தங்களது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்கள் அடிபட்ட அந்த ரசிகர்கள்.


 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close