[X] Close

ஹாட்லீக்ஸ் : திங்கட்கிழமை தேர்தல் வந்தால்..?


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 06 Oct, 2018 10:02 am
  • அ+ அ-

தடங்கல்களைக் கடந்து ஒருவழியாக கடந்த 22-ம் தேதி நாகர்கோவிலில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கடத்தினார்கள் சாரி... நடத்தினார்கள்.

 டெல்லிப் புள்ளி என்பதாலோ என்னவோ இந்த விழாவில் முதல்வர் உள்ளிட்ட அத்தனை பேருமே தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தைத்தான் தாங்கிப் பிடித்தார்கள். 

அந்த உற்சாகத்துடன் மைக் பிடித்த தளவாய், “எங்க மாவட்டத்துல கூட்டமெல்லாம் நல்லாத்தா வரும். ஓட்டுப் போடும்போது மாறிடுவாங்க. அதுலயும் திங்கள்கிழமை தேர்தல் வந்துருச்சுன்னாலே, எங்களுக்கு முடிவு முன்னமே தெரிஞ்சுடும்” என்று சொல்ல, கூட்டத்தில் சிரிப்பலை.

 குமரி மாவட்ட தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் மத அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. 

திங்கள்கிழமை தேர்தல் என்றால் இங்குள்ள தேவாலயங்களில், யாருக்கு வாக்களிப்பது என ஞாயிற்றுக்கிழமை தீர்க்கமாக முடிவெடுத்துவிடுவார்கள். 

இதைத்தான் தளவாய் ‘குணமாய்’ சொன்னாராம்!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close