[X] Close

அண்ணனும் தம்பியுமா ஓபிஎஸ், இபிஎஸ்; பிரிக்கமுடியாது!  - அமைச்சர் வேலுமணி உறுதி


ops-ttv-velumani

ஓபிஎஸ் - இபிஎஸ்

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Oct, 2018 18:30 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அண்ணனும் தம்பியுமாக இருந்து முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களைப் பிரிக்கப்பார்க்கிறார்கள். அது நடக்கவே நடக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பிறகு ஓபிஎஸ் அப்படி தினகரனை சந்திக்கவில்லை. ஓபிஎஸ்தான் தர்மயுத்தம் ஒன்றையே தொடங்கினார். கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் சசிகலா, தினகரன் சம்பந்தப்பட்டவர்களே இருக்கக்கூடாது என்று போராடினார்.

முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் ஆட்சியையும் கட்சியையும் கைகோர்த்து அருமையாக வழிநடத்திச் செல்கிறார்கள். இப்படி அண்ணனும் தம்பியுமாக சகோதரப் பாசத்துடன் அவர்கள் செயலாற்றுவதைப் பார்த்து விட்டு, தினகரனால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை.

அதனால்தான், ஏதேதோ சொல்லி, பிரிக்கப் பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close