[X] Close

குழப்பம் ஏற்படுத்துறாரு தினகரன்! – கே.பி.முனுசாமி தாக்கு


ops-ttv-kpmunusamy

டிடிவி.தினகரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Oct, 2018 18:10 pm
  • அ+ அ-

கட்சி, ஆட்சி மற்றும் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தப்பார்க்கிறார் டிடிவி.தினகரன் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார் எனும் செய்தி குறித்து தெரிவித்ததாவது:

தினகரன் ஏற்கெனவே குழம்பியிருக்கிறார். இப்போது தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பிவிடப் பார்க்கிறார். தினகரன் கற்பனை உலகில் மிதக்கிறார். அது அவருக்கு தோல்வியையே தரும்.

ஜெயலலிதா இருந்த வரைக்கும் அவரால் கட்சிக்குள்ளேயும் போயஸ் கார்டனுக்குள்ளேயும் வரவே முடியவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலாவால் மீண்டும் கட்சிக்கும் பொறுப்புக்குமாக வந்தார். அதிலும் உயர்ந்த பதவியை அடைய நினைத்தார். ஆனால் அது முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் குழப்பிக்கொண்டிருப்பதே அவருக்கு வாடிக்கையாகிவிட்டது. உண்மைக்கு மாறான தகவல்களையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். கழகத் தொண்டர்கள் அவர் சொல்வதைக் கேட்டு ஏமாறமாட்டார்கள்.

கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பங்கு வந்து உயர்ந்த சிந்தனையுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிற ஓபிஎஸ், இதுபோன்ற, இவர்களைப் போன்ற, கீழ்த்தரமான செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்.

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close