[X] Close

 தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது     - சூலூர் கனகராஜ் அதிரடி


ops-ttv

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Oct, 2018 17:29 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

 தினகரனும் ஓபிஎஸ்ஸும் சந்தித்துக்கொண்டார்கள் என்ற செய்தியே மகிழ்ச்சியைத் தருகிறது. தினகரனும் அதிமுகவும் சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

  சூலூர் கனகராஜ் இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

    அதிமுகவும் அமமுகவும் ஒன்று சேரவேண்டும். அப்படி ஒன்று சேருவதற்கான வேலையைத்தான் ஓபிஎஸ் செய்து வருகிறார். தினகரனை ஓபிஎஸ் சந்தித்தது எனும் செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

    தினகரனுடன் அதிமுக சேர்ந்தால்தான் இந்த ஆட்சியைக் காப்பாற்றமுடியும். இதற்காக ஓபிஎஸ் சந்தித்ததில் எந்தத் தவறுமில்லை. சொல்லப்போனால், திமுகவை வீழ்த்த தினகரனும் அதிமுகவும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் அது சாத்தியமாகும்.

  இவ்வாறு சூலூர் கனகராஜ் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close