[X] Close

18 எம்எல்ஏ-க்கள் வழக்கு தொடர்பான தீர்ப்புக்குப் பின் அதிமுக அரசு நீடிக்காது: காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் கருத்து


congress-speaks-about-18-mlas-case

உதகையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக பொறுப்பாளர் சஞ்சஜ் தத்.

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 16:18 pm
  • அ+ அ-

18 எம்எல்ஏ-க்கள் வழக்கு தொடர்பான தீர்ப்புக்குப் பின் அதிமுக அரசு நீடிக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம், உதகையிலுள்ள இளம் படுகர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஆர்.கணேஷ் தலைமை வகித்தார். இதில் பங்கேற்க வந்த சஞ்சய் தத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உதகையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடினேன். இந்த சந்திப்பு, 18 நாள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டம். நீலகிரி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை கட்சியினரை சந்திக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் நிலை, பலம், பலவீனத்தை கண்டறிவதே இப்பயணத்தின் நோக்கம்.

ராகுல்காந்தி அறிவுறுத்தலின்படி மாவட்ட, வட்டார மற்றும் பூத் அளவில் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் பிரச்சினைகளுக்காக, காங்கிரஸ் கட்சி போராடும். மத்திய, மாநில அரசுகளின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ஓர் எம்எல்ஏ உள்ளார். வரும் காலங்களில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்ற முழு வீச்சில் செயல்படுவோம். சக்தி மற்றும் லோக் சம்பர்க் அபியான் என இரு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். லோக் சம்பர்க் அபியான் திட்டத்தின் கீழ், பூத் அளவில் கட்சியினர் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்வார்கள்.

மக்கள் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை மத்திய அரசு தீர்மானிப்பதை எதிர்கிறோம்.

திமுகவுடனான நல்லுறவு, கூட்டணி பலமாக உள்ளது. கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்வார். தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் எங்கள் கூட்டணி கைப்பற்றும்.

அதிமுக அரசு பல குளறுபடிகளிடையே செயல்படுகிறது. 18 எம்எல்ஏ-க்கள் வழக்குத் தீர்ப்பு வெளியானால், இந்த அரசு நீடிக்காது. ரபேல் போர் விமான ஊழல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்துப் போராடி வருகிறோம்.

புலனாய்வு நிறுவனங்களைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சஞ்சஜ் தத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close