[X] Close

தினகரனை சந்தித்தாரா ஓபிஎஸ்?- தங்கத் தமிழ்ச் செல்வன் பரபரப்பு புகார்.


ops-ttv-meet

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 09:02 am
  • அ+ அ-

ஜூலை 12 2017 அன்று டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்துப் பேசியதாக தங்க தமிழ்ச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "சின்னம்மா குடும்பத்தை எதிர்த்துதான் தர்மயுத்தம் பண்ணார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி. எடப்படி முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர். அவர் சிரிச்சா 10,000 பரிசு தருகிறேன். அவர் எதிர்த்து கோட்டையில் உண்ணாவிரதம் இருப்பேன். இப்படியெல்லாம் தமிழ்நாடு முழுவதும் கூட்டம்போட்டு வஞ்சு முடிச்சிட்டு எங்களையும் வஞ்சு முடிச்சிட்டு. பிரதமர் சொன்னாருன்னு சொல்லி இரண்டு பேரும் சேர்ந்துவிடுகிறார்கள். கவர்னர் கையை குலுக்கு சேர்த்து வைக்கிறார். சேர்ந்துட்டா அங்க நல்லா இருக்கணும். அதவிட்டுட்டு, கடந்த 2017 ஜூலை 12-ம் தேதி கோட்டூர்புரம் பில்டர் வீட்டில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசியது உண்மை. அப்போ எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டுவிட்டு டிடிவி தினகரனும் தானும் சேர்ந்து நல்லாட்சி கொடுப்போம்னு பேச்சு. டிடிவி நேரம் வரட்டும் என சொல்லி அனுப்பிவிட்டார். முடிஞ்சு போச்சு.

போனவாரம் அதே பில்டர்கிட்ட கேக்குறாரு.. இந்த மாதிரி நான் அண்ணன் டிடிவி தினகரனை சந்திக்க கேட்கிறாரு. அவரு உனக்குதான் டிடிவியை நல்லா தெரியும். அவர்தான் உன்ன முதல்வராக்கினார். நீயே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிக்கோன்னு ஒதுங்கிக்கிட்டார். 2-ம் தேதி மேடையில் டிடிவியையும் சின்னம்மாவையும் வசை பாடுறீங்க.

அந்த வருத்தத்திலதான் டிடிவி தினகரன் இதை பேட்டியில் சொல்லியிருக்கிறார். போனவாரம் தான் என்ன சந்திச்சி எடப்பாடியை கவிழ்க்கனும் சொல்ற. அப்புறம் என் குடும்பத்த திட்டுற. எந்த பக்கம் நியாயம் இருக்கு. முதலில் ஸ்டெடியா நில்லு. எடப்பாடி ஓபிஎஸ்-க்கு பிரிவை ஏற்படுத்த கட்சியைக் கைப்பற்ற டிடிவி விரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close