[X] Close

நிழலைக் கண்டுகூட பயப்படுவார்கள்: விஜய்யை விமர்சித்த அமைச்சர்களுக்கு வீரமணி குட்டு


actor-vijay-speech

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Oct, 2018 11:31 am
  • அ+ அ-

தமிழக அமைச்சர்கள் நிழலைக் கண்டுகூட பயப்படுவார்கள் என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

அண்மையில் நடந்த சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், "சர்கார் படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால், நிஜத்தில் முதல்வரானால் நடிக்கமாட்டேன். உண்மையாக இருப்பேன்" என்று கூறினார்.

இது குறித்து அதிமுக அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார். நடிகர் விஜய் சர்க்கஸ் வேண்டுமானால் செய்யலாம் சர்கார் எல்லாம் செய்ய முடியாது என அமைச்சர் உதயகுமார் விமர்சித்தார்.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நிழலைக் கண்டுகூட பயப்படுபவர்கள் நம் அமைச்சர்கள். அதனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறிச் சென்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close