[X] Close

எடப்பாடியைத் தான் சொல்றார் விஜய்: தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி


thanga-tamilselvan-speech-about-vijay

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 14:22 pm
  • அ+ அ-

முதல்வர் எடப்பாடியைப் பற்றித்தான் விஜய் பேசியிருக்கிறார் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருக்கிறார்

சென்னையில் ’சர்கார்’ இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கினார். அப்போது, “நிஜத்தில் முதலமைச்சரானால் என்ன செய்வீர்கள்” என்ற கேள்வியை எழுப்பும் போது “நிஜத்தில் முதலமைச்சரானால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்பதையே சொல்ல வருகிறேன்” என்று பதிலளித்தார் விஜய்.

இதன் மூலம் விஜய்க்கும் அரசியல் ஆசை இருப்பது உறுதியாகியுள்ளது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுடைய கருத்துகளைத் கூறிவருகிறார்கள்.

விஜய்யின் பேச்சு குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது:

நல்லத் தானே சொல்லியிருக்கார். ரொம்ப கேஷுவலாக டயலாக் விட்டிருக்கிறார். உண்மையில் அப்படித்தான் இருக்கணும். நடிக்காமல் மக்களுக்கு சேவை செய்யணும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு நடிச்சுட்டு இருக்கார் என்பதை ரொம்ப நாசூக்காக சொல்லியிருக்கார். அவருக்கு என் பாராட்டுக்கள்

இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close