[X] Close

ஹாட்லீக்ஸ் : ஜில் பீர் வேணும்; கலெக்டரிடம் மனு!


hotleaks-jil-beer

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 09:58 am
  • அ+ அ-

கடந்த வாரம், தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்ட ஆட்சியர் நடத்திய மனு நீதி நாளில் வித்தியாசமான மனு ஒன்று வந்தது. 

ஜகித்யாலா பகுதியைச் சேர்ந்த சூர்யம் என்ற சூரியநாராயணா அளித்த அந்த (அத்தியாவசிய!) குறை தீர் மனுவில், 

‘மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளிலும் ‘பார்’களிலும் தரமான ஜில் பீர்கள் கிடைப்பதே இல்லை. 

நான் அதிகம் விரும்பும் அந்த பிராண்டின் பீரும் விற்பனை செய்வதில்லை. இது மனித உரிமையை மீறிய செயலாகும். 

தனது விருப்பப்படி ஒரு பொருளை வாங்குவது நுகர்வோரின் உரிமை என்கிறது இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 19 . 

அதன்படி, எனக்கு விருப்பமான பீரை கடைக்காரர்கள் விற்காதது சட்டப்படி குற்றமாகும். 

இதற்குத் தாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து நான் விரும்பும் ஜில் பீரை எனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்று இருந்ததாம். 

இதைப் படித்துவிட்டு அதிகாரிகள் சிரிப்பதா சீறுவதா என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தார்களாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close