[X] Close

ஹாட்லீக்ஸ் : பொங்குதே கொங்கு!


hot-leaks-admk

டிடிவி.தினகரன்

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 10:09 am
  • அ+ அ-

இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவை கொடீசியா மைதானத்தில் தனது அமமுக கூட்டத்தை அமர்க்களமாய் நடத்தினார் தினகரன். 

இதற்குப் பிறகு கோவை அதிமுக-வில் பலரும் தினகரன் பக்கம் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இதில் பதவி இல்லாமல் இருக்கும் மாஜிக்கள் சிலர், “இப்ப நாங்க உங்க பின்னாடி வந்தா ஏதாச்சும் வம்பு வழக்குகளைப் போட்டு எங்களை முடக்கிருவாங்க. பொறுமையா இருங்க நாங்க பெரும் படையே உங்க பின்னாடி வரக் காத்திருக்கோம்” என்று தினகரனுக்குத் தூது அனுப்பியிருக்கிறார்களாம். 

இதனால் உற்சாகமடைந்த தினகரன், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொகுதி வாரியாக மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகளுக்குத் தயாரானார். 24-ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்தக் கூட்டங்களுக்கு வழக்கம் போல போலீஸ் அனுமதிமறுக்கப்பட்டுவிட்டது.

 இதனால், நீதிமன்ற உத்தரவு பெற்று இந்த நிகழ்ச்சிகளை நடத்தத் தயாராகி வரும் தினகரன் கோஷ்டியினர், “இங்கு எங்களது நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொங்குச் சீமையின் முக்கியஅமைச்சர்களும் விசாரணை வளையத்தில் சிக்கியிருப்பார்கள்” என்று கண் சிமிட்டுகிறார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close