[X] Close

திமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு 


minister-cellur-raju-speech

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 12:03 pm
  • அ+ அ-

திமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

காட்பாடி காந்திநகரில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி இந்த பண்ணை பசுமைக் கடை தொடங் கப்பட்டது. இதுவரை இந்தக் கடை யில் ரூ.1 கோடியே 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மொத்த லாபமாக ரூ.5.97 லட்சம் கிடைத்துள்ளது. இங்கு, குறைந்த விலையில் தரமானப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

வெளி மார்க்கெட்டில் காய்கறி களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், தரமான காய்கறிகள் மக்களுக்கு தடையின்றி வழங் கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் அவர்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. தரகர் இல்லாமல் கொள்முதல் செய்யப் படுவதால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உரத் தட்டுப்பாடு இருக்காது என்ற நிலை உள்ளது. இந்தாண்டு பருவமழை சிறப்பாக பெய்துகொண்டிருப்ப தால் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறியீட்டுக்கு அதிகமாக கடன் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கத்திலும் 3 மாதங் களுக்கு தேவையான உரங்கள், விதைகள் இருப்பு வைத்துக் கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. விவசாயிகளுக்கு ரசாயன உரம் மட்டுமில்லாமல் இயற்கை உரம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஊழலை உலகத்துக்கு அறிமுகம் செய்த கட்சி திமுகதான். திமுகவினரின் சொத்துக்கள் எல்லாம் குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? திமுகவினர் நகைச்சுவைக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அவர்களை, மக்கள் கேலி தான் செய்வார்கள். நான், 1979-ல் பட்டப்படிப்பு முடித்தேன். உடனே தொழில் தொடங்கினேன். தறி கம்பெனி தொடங்கி 1991 வரை நடத்தினேன். அன்று ஆரம்பிக்கப்பட்ட மெடிக்கல் ஷாப், தேநீர் கடை இன்றும் இருக்கிறது. எனது மனைவி இன்றும் ‘சாகர்’ என்ற துணிக் கடையை நடத்தி வருகிறார்.

நாங்கள் எல்லாம் ஒழுக்கமாக நியாயமாகவும் தூய்மையாகவும் தொண்டுள்ளம் படைத்தவனாகவும் இருக்கிறோம். சைக்கிளில் சென்று ஒளி விளக்கு படம் பார்த்தேன் என்று ஸ்டாலின் கூறினார். இன்று அவர் எந்த வண்டியில் வருகிறார் என்று பார்க்க வேண்டும். இவர்களின் ஊழலை இந்த நாடே பார்த்து சிரித்தது. தமிழகத்தில் இன்று சாதாரண சாமானியனின் ஆட்சி நடக்கிறது. அம்மாவின் நல்லாட்சி சிறப்பாக நடக்கிறது. இதை மறைப்பதற்கு திமுகவினர் நடத்தும் நாடகம் நகைப்புக்குரியது’’ என்றார்.

அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close