[X] Close

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றச்சாட்டு


raja-speech-at-dmk-protest

  • kamadenu
  • Posted: 19 Sep, 2018 10:26 am
  • அ+ அ-

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.

அதிமுக அரசைக் கண்டித்து பெரம்பலூரில் நேற்று திமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலர் எம்.பிரபாகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ. ராசா பேசியது: குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் காவல்துறை தலைவர் வரை கோடிக்கணக்கான ரூபாய் அளவில் கொள்ளையடித்தது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது. ஆனால், இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் இப்போது மக்கள் விரோத கமிஷன், கலெக்.ஷன், கரப்ஷன் ஆட்சி நடக்கிறது. ஊழல் மலிந்த தமிழக ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மக்கள் விரோத அதிமுக ஆட்சியை விரைவில் தூக்கியெறிந்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைக்க சபதம் ஏற்போம் என்றார்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சய கோபால், என்.ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பி னர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், சிவக்குமார் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close