[X] Close

ஹாட்லீக்ஸ் : எம்.ஜி.ஆர் விழா... எம்.பி-க்குள்ள என்னமோ திட்டமிருக்கு!


hot-leaks-admk

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Sep, 2018 08:44 am
  • அ+ அ-

குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 22-ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. 

கடந்த ஓராண்டாகக் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு பலமுறை பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. 

அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த விஜயகுமார் எம்.பி இப்பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். 

இந்நிலையில் அண்மையில் கட்சி அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மாவட்டச் செயலாளர் பதவி போன பின்பு டெல்லியிலேயே அநேக நாட்கள் இருக்கிறார் எம்.பி-யான விஜயகுமார். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் விழாவைக்கூட அவரும் அவரது ஆதரவாளர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அதிமுகவினர், “எங்க எம்.பி-க்குள்ள வேறு என்னமோ திட்டமிருக்கு” என்று திகில் கிளப்புகிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close