[X] Close

ஆட்டோ ஓட்டுநர் கதிர் வீட்டுக்கு சென்றார் தமிழிசை: முற்றுபெறுமா சர்ச்சை!


tamilisai-visits-auto-driver-kathirs-home

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Sep, 2018 13:36 pm
  • அ+ அ-

தெருக்கூத்து நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதிர் இல்லத்திற்கு சென்று அவருடன் உரையாடி அவரது குடும்பத்தாருக்கு இனிப்புகளை வழங்கினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். 

ஆனால், இதற்கும் நெட்டிசன்கள் முதலில் அடிப்பார்கள் அப்புறம் ஸ்வீட் கொடுப்பார்களா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

முன்னதாக, சைதாப்பேட்டையில் நடந்த பாஜக நிகழ்ச்சியின்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் கேள்வி எழுப்ப அதை கண்டுகொள்ளாததோடு அவரை பாஜகவினர் அடித்து விரட்டுவதையும் கண்டுகொள்ளாமல் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. 

இது பெறும் சர்ச்சையானது. அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழிசை அரசியலில் வளர வேண்டும் என்று துரைமுருகன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ஆட்டோ ஓட்டுநர் கதிர் இல்லத்துக்கு சென்றார். அவரது வீட்டாருக்கு இனிப்பு வழங்கினார். இந்த வீடியோ தமிழிசையின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

வீடியோவில் உள்ளதாவது:

தமிழிசை: நல்லா இருக்கீங்களாப்பா? 
கதிர்: அது வந்து ஏதோ ஒரு இமோஷன்ல பண்ணது. நான் வந்து வாஜ்பாய் காலத்துல நம்ம பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியிருக்கேன்.
தமிழிசை: வாங்க.. வாங்க.. ஸ்வீட் எடுத்துக்கோங்க
கதிர்: உங்களுக்கு ஒண்ணும் வருத்தமில்லையே? நான் உங்களுக்கு எதிரியும் கிடையாது. நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஒரு ஆட்டோ ஓட்டுநரா கேட்டேன். வாஜ்பாய் ஐயா நிக்கும்போது நான் நோட்டீஸ் ஒட்டியிருக்கேன். மீட்டிங் நடந்ததால் நான் இந்தப் பிரச்சினையையும் கேட்டேன்.
தமிழிசை: கரெக்ட் கேட்டீங்களே. இல்ல இல்ல.. நானும் சிரிசிக்கிட்டே பதில் சொன்னேனே.. நைட் 12.30 மணி ஆயிடுச்சுல"

இத்துடன் அந்த வீடியோ முடிகிறது. ஆனால், இத்துடன் இந்த சர்ச்சை முடியுமா என்பது தெரியாது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close