[X] Close

எச்.ராஜா விஷயத்தை மட்டும் பேசுவது திசை திருப்பும் செயல்: இல.கணேசன் கருத்து


ela-ganesan-speech-about-hraja-issue

  • kamadenu
  • Posted: 18 Sep, 2018 10:19 am
  • அ+ அ-

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் கரட்டாங்காட்டில் நேற்று நடைபெற்ற பாஜகவின் 3-ம் மண்டல மாநாட்டில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிந்து பேச ஏனைய கட்சிகள் தயங்குகின்றன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை போலீஸார் எங்கெல்லாம் தடுத்தார்கள், ஏனைய பிரிவைச் சார்ந்தவர்கள் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறித்து பேச, எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. ஆனால் எச்.ராஜா பேசியது குறித்து பகிரங்கமாக பல எதிர்வினைகளை ஆற்றி வருகின்றன. எச்.ராஜா விஷயத்தை மட்டும் பேசுவது திசை திருப்பும் செயல்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு டாலர் மதிப்பும், கச்சா எண்ணெய்யும்தான் காரணம்; மத்திய அரசு அல்ல. பாஜக அரசை விமர்சிக்க காங்கிரஸுக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்துத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்.

அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் சமதூரத்தில் வைத்துத்தான் பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close