[X] Close

இருக்கா? இல்லையா?- அமைச்சர்கள் பேசிட்டு சொல்லட்டும்!- துரைமுருகன் கிண்டல்


duraimurugan-on-powercuts

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Sep, 2018 13:34 pm
  • அ+ அ-

தமிழ்நாட்டில் மின் வெட்டு இருக்கா? இல்லையா? என்பதை ஆளுங்கட்சி அமைச்சர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டு மக்களுக்கு சொல்லட்டும் எனக் கூறியிருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

தமிழகத்தில் சமீப காலமாக மின் வெட்டு நிலவுகிறது. கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் மின் தடை நீடிக்கிறது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகவும் அதிமுக அரசு மின் வாரியத்தின் மோசமாக நிர்வாகிப்பதே இதற்கு காரணம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் அறிக்கை வெளியிட்டார்.

"தமிழகத்தில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைந்துள்ளது. தமிழ்நாடு மின் உறுபத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில், இன்னும் 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது. அதனால், நிலக்கரித் துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சக அதிகாரிகள் மூலம் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒருநாளுக்கு கிடைக்குமாறு உறுதி செய்ய வேண்டும்'' என முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மின்வெட்டு குறித்து துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "இந்த நாட்டில் மின் தடையே இனிமேல் இருக்காது என்கிறார் ஒரு மந்திரி. இன்னொரு மந்திரியோ நிலக்கரி கேட்டு கடிதம் எழுதுகிறார். எனவே, மந்திரிகள் கலந்து பேசி நிலைமை என்னவென்பதை மக்களுக்கு சொல்லட்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close