[X] Close

மல்லையாவை வங்கியைத் தொடர்பு கொள்ளச் சொன்னார் ஜேட்லி! - ஸ்டாலினுக்கு தமிழிசை விளக்கம்


tamilisai-reply-to-stalin-tweets

  • kamadenu
  • Posted: 14 Sep, 2018 14:11 pm
  • அ+ அ-

அருண் ஜேட்லி தொடர்பான ஸ்டாலின் ட்வீட்டுகளுக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதற்கு அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

விஜய் மல்லையாவின் பேச்சை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது! பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும்! இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்!” என்று ட்வீட் செய்திருந்தார்.

ஸ்டாலினின் ட்வீட்டைக் குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சோனியாவின் கைப்பாவை பிரதமர் மன்மோகன்தான் கார்ப்பரேட்களின் கைப்பாவை?கைப்பாவையான கைப்பாவை?” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், அருண் ஜெட்லியிடம் விஜய் மல்லையா பேசியது என்ன? மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு “அருண்ஜெட்லி விளக்கி விட்டாரே? வழியில் சந்தித்தார்.வங்கியை தொடர்பு கொள்க! என்றேன் அவ்வளவு தான்.சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை! மக்களுக்கு விளங்கியது தெளிவாக மல்லையாவுக்கு விதிகளை மீறி பெரும் கடன்கள் வாரி வழங்கியது காங்கிரஸ் ஆட்சியில் தானே? சோனியாவின் கைப்பாவை மன்மோகன் தானே கைப்பாவையானார்” என்று தெரிவித்திருக்கிறார் தமிழிசை
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close