[X] Close
 

காங்கிரஸ் வைத்த கடன்! - இல.கணேசன் கருத்து


ilaganesan

இல.கணேசன்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Sep, 2018 19:08 pm
  • அ+ அ-

காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, பெட்ரோல் டீசல் விலையை ஏற்றாமல், கடன் வைத்துவிட்டது. அதனால்தான் இப்போது விலையை எங்களால் குறைக்கமுடியவில்லை என்று பாஜகவின் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சிறிது நாளில், பெட்ரோல் லிட்டருக்கு நூறு ரூபாயைத் தொட்டுவிடுமோ என்று மக்கள் அஞ்சி வருகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தியது. இதில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்வேறு கட்சிகளும் ஆதரித்து கலந்துகொண்டன.

தமிழகத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் முதலான கட்சிகள் ஆதரித்தன. பாரத் பந்த் போராட்டங்களிலும் கலந்துகொண்டன.

இதனிடையே, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஓரளவு குறைத்து அறிவித்தன. இதேபோல், தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள் மக்கள்.

இந்த நிலையில், பாஜகவின் இல.கணேசன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

மத்தியில், முந்தைய ஆட்சியான காங்கிரஸ் ஆட்சியின் போது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துத்தருகிறேன் எனச் சொல்லி, ஏராளமாகக் கடன் வைத்துவிட்டது. அதாவது, 1,44,000 கோடி கடனாகிவிட்டது.

உலகில், கச்சா எண்ணெயின் விலை குறைந்தப் போதிலும் கடன் பிரச்சினையால், எங்களால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கமுடியவில்லை.

ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவரலாம் என்றால், அனைத்து மாநில அரசுகளும் அதனை ஏற்கவேண்டும். நேற்றுக் கூட, தமிழக அரசு, இதனை ஏற்கமாட்டோம் என அறிவித்துள்ளது.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.

 

[X] Close